என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pawalakodi Kummiattam"
- கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.
- ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.
வீரபாண்டி :
திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 12-ந்தேதி வரை விழா நடக்கிறது.இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், அம்மன் சக்தி அழைப்பு, அம்மன் சாட்டு, பொங்கல், மாவிளக்கு, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
நேற்று காலை 7மணிக்கு அம்மன் சாட்டு, இரவு 12மணிக்கு ஊர்சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 5மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் பொங்கல், 7மணிக்கு காப்பு கட்டுதல், 7-15மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வர கொமுடி செல்லுதல் நடைபெற்றது.
இரவு 8மணிக்கு ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அர்ச்சகர் கும்பம் தாளித்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு 10மணிக்கு பழனிச்சாமி கவுண்டர் ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு படைக்கலம் கொண்டு செல்லுதல் நடக்கிறது.
10-ந்தேதி அதிகாலை 3மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4மணிக்கு ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.
11-ந்தேதி காலை 6மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், காலை 9மணிக்கு ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் , 10மணிக்கு ஸ்ரீசவுடேஸ்வர் அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு பரிவட்டம் கொண்டு செல்லுதல், பகல் 1மணிக்கு ஸ்ரீமாகாளியம்மனுக்கு பெரிய பூஜை, 3மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், இரவு 11மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
12-ந்தேதி காலை 6மணி முதல் பகல் 2மணி வரை மஞ்சள் நீராடுதல், பகல் 11மணிக்கு மாகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவில் 9-ந்தேதி மாலை 6-30மணி முதல் 8மணி வரை திருப்பூர் பவளகொடி கும்மியாட்டம் நடக்கிறது. 10-ந்தேதி இரவு 8மணிக்கு கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்