என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "people living"
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதிலும் எத்தனை பேர் வீடின்றி வசிக்கிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதிலும் வீடுகள் இன்றி சாலையோரம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுத்து ஜனவரி 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #MadrasHC #StreetDwellers
கொடைக்கானல்:
கொடைக்கானல் யூனியனுக்குட்பட்ட காமராஜர் புரத்தில் 10-க்கும் மேற்பட்ட பளியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே போல பழனி - கொடைக்கானல் ரோட்டிலும் இவர்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு வீடு இல்லை. படிப்பறிவு இல்லாத இவர்கள் தோட்ட வேலை, கூலி வேலை பார்த்து வருகின்றனர். குறைந்த வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது உள்ளதால் இவர்களால் வாடகை கொடுத்து தங்குவதற்கும் வசதி இல்லை.
இதனால் தார்ப்பாய் மற்றும் வனப்பகுதியில் கிடைக்கும் ஓலைகளை வைத்து வீடுகள் அமைத்து அதில் தங்கி வருகின்றனர். அதிக மழை பெய்யும் போதும், கடுமையான பனி பெய்யும் போதும், குடிசைக்குள் இருப்பது மிகவும் கடினமான செயலாகும்.
பெரும்பாலான நாட்கள் இவர்களுக்கு இதே போல் அமைந்து விடுவதால் தினசரி குடும்ப செலவுக்கு மட்டும் வேலைக்கு சென்று பசியாறி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாலை வசதி இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சார வசதி கிடையாது. எங்கள் பகுதி மக்களின் குறைகள் குறித்து பல அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் வாதிகளும் வாக்கு கேட்பதற்காக மட்டும் எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ செலவு செய்ய முடியாது.
மேலும் வேலைக்கும் போக முடியாது என்பதால் பல நாட்கள் பட்டினியாகவே வாழ்க்கையை கழித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்று மத்திய அரசு பெருமிதம் கூறி வரும் நிலையில் வசிக்க இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருவது வேதனையான விஷயம். எனவே இந்நிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #digitalindia
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்