என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Perunthalaivar makkal katchi"
- கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள்.
- மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி கிராம சாவடி தெருவில் உள்ள கே.வி.எம்.திருமண மாளிகையில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடக்க உள்ளது.
கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர தலைவர் எஸ். செல்வன் நன்றி கூறுகிறார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது.
மக்களின் சந்தேகங்களை போக்குவதற்காகவும், தமிழக அரசு மீதுள்ள களங்கத்தை போக்கிடவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சாமி சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு முழுமையான விசாரணையை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களை சார்ந்த மக்கள் சென்னையில் வியாபாரம் செய்து தொழில் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மணலி போன்ற வடசென்னை பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தென் மாவட்டங்களுக்கான ரெயில் சேவையை தாம்பரத்திலிருந்து தொடங்குவது என்பது தவறானகொள்கை முடிவாகும். ராயபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவையை தொடங்குவது தான் சரியானதாக இருக்கும். அதுதான் தென்மாவட்ட மக்களுக்கும், வடசென்னை வியாபார பெருமக்களுக்கும் வசதியானது என்பதை கருத்தில் கொண்டு தென்னக ரெயில்வே தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்