என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PF Interest Rate"
- நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- வட்டி விகிதம் உயர்வு பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், உறுப்பினர்களுக்கு பி.எப். ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்கள் வடிவில் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கு சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2022-23-ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 8.15 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2023-24-ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் இன்றைய கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி விகிதம் உயர்வு குறித்த தகவல் 6 கோடிக்கும் அதிகமான பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.