search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry CM"

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #Narayanasamy #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கை அரசியல் சாசன 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

    மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவில் கவர்னர் தலையிட முடியாது என்றும் அரசின் அன்றாட நடவடிக்கைகளிலும் கவர்னர் தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என நாங்கள் கூறியபோது, மத்திய உள்துறை அமைச்சகம் மாற்று கருத்தை வெளியிட்டது.

    அதோடு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சீனியர் வக்கீல்கள் ப.சிதம்பரம், வேணுகோபால், சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இன்று இவ்வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    நிர்வாகம், அரசு அதிகாரிகள் நியமனம், நிதி அதிகாரம் ஆகியவற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இதன்மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. 3 ஆண்டாக நாங்கள் போராடிய போராட்டத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வந்தேன். இதை உறுதி செய்யும் வகையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பு புதுவை மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கவர்னரின் அதிகார கொட்டத்தை அடக்குவதற்கும் வழி வகுக்கும். நீதி வென்றுள்ளது. புதுவை மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு கவர்னரின் செயல்பாட்டிற்கு கிடைத்த பதிலடி.



    கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல் தடுத்ததற்கும், முடக்கம் செய்ததற்கும் கவர்னர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    காங்கிரஸ் அரசை முடக்குவதற்காக கவர்னர் கிரண்பேடியை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். எனவே, பிரதமர் மோடி இந்த தீர்ப்பிற்கு பதில் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #KiranBedi

    புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Puducherrygovernment #Puducherrygovernmentban #plasticusageban
    புதுச்சேரி:

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட 14 வகையான எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

    அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை.



    தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக புதுச்சேரி மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வந்தது.

    இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று அறிவித்துள்ளார். #Puducherrygovernment #Puducherrygovernmentban #plasticusageban 
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

    அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையில் இருக்கும் புதுவை முதல்-அமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Narayanasamy #MKstalin
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். இவர் தனது கிராமமான பூரணாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    96 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு மரணமடைந்தார்.

    இதற்கிடையே கஜா புயல் நிவாரணம் நிதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றிருந்தார். தாயார் இறந்த செய்தி நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து நாராயணசாமி டெல்லியில் இருந்து உடனடியாக புதுவை திரும்பினார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

    ஈஸ்வரி அம்மாளின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் பூரணாங் குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.   #Narayanasamy
    கஜா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Gaja #GajaCyclone #Narayanasamy
    காரைக்கால்:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை பகல் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்பதால் புதுவை மற்றும் காரைக்காலில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுவையில் இருந்து பேரிடர் மீட்புகுழு காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். அதிகாரிகள் யாரும் விடுமுறையில் செல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதியில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், பார்வையிட செல்லுதல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.

    புயல் பாதிப்பின் போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தொலை பேசி எண்கள் மற்றும்செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காரைக்காலை அடுத்த திருநாள்ளாற்றில் உள்ள தர்பாரணேஸ்வரர் கோவில் சார்பில் ரூ.75 லட்சத்தில் புணர் அமைக்கபட்ட எம தீர்த்தம் மற்றும் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கோவில் ஊழியர்களுக்கு கட்டபட்ட குடியிருப்பு மற்றும் கொல்கத்தா பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.1 கோடியே 50 லட்டசத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #Gaja #GajaCyclone #Narayanasamy
    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.

    ‘கஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையில் 14-ந்தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் 12 முதல் 15-ந்தேதிவரை பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையிலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக தமிழகம், புதுவையில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் நானும், அமைச்சர் ஷாஜகானும் அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

    அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்கள் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டோம். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், மீன், கல்வி, மருத்துவம், மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை மழைக்காலத்தில் அங்கிருந்து அகற்றி சமுதாய கூடம், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை உடனே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்வர். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிகளில், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    அமைச்சர் ஷாஜகான் இன்றும், நாளையும் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார்.

    புதுவை அரசு ஏற்கனவே கால்வாய்களை தூர்வாரியுள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்ளை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் தண்ணீர் தேங்கும் இடங்களான கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு, சுப்பையா சிலை ஆகிய பகுதியில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக புதுவை அரசு கஜா புயலை சமாளிக்கவும், பேரிடர் வராமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இருப்பினும் அதிக வெள்ளம் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அணுகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு டாக்டர் கலைஞர் என்ற பெயர் சூட்டப்படும் என அறிவித்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
    சென்னை:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல் வாழ்விற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுவைக்கு, முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து பாடுபட்ட தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில், புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு, தலைவர் கலைஞரின் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ள தங்களுக்கும் தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள அன்னை இந்திரா காந்தி சிலை இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால்- திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் “டாக்டர் கலைஞர்” பெயர் சூட்டப்படும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும், தி.மு.க.வின் சார்பில், பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    அதேவேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கப் போவதுமான, இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க. என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும், தலைவர் கலைஞரின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.

    தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்க இயலாத இடத்தை புதுச்சேரி பெற்று இருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவையில் பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் சட்டசபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் அடுத்த மாத செலவுக்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்த கவர்னர் நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.



    அந்த நிபந்தனையால் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டசபை கூட்டத்தை கூட்டவில்லை. அந்த கூட்டம் எப்போது நடக்கப்போகிறது என்றும் தெரியவில்லை.

    எனவே கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெற்றதற்கு பிறகு தான் பட்ஜெட் நிதியை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டது.

    ஒவ்வொரு துறைகளிலும் இருக்கும் உபரி நிதிகளைக் கொண்டு சம்பளம் வழங்க அதிகாரிகள் ஆலோசித்தனர். இதற்காக சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்தது. ஆனால் இதிலும் சிக்கல் இருப்பது தெரியவந்தது.

    ஒவ்வொரு துறையிலும் அனுமதி பெற்று தான் பணத்தை சம்பளமாக வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இன்றுவரை பட்டியல் தயாரிக்கப்பட்டு வங்கிக்கு அனுப்பப்படவில்லை.

    வழக்கமாக மாத கடைசி நாளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே பட்டியல் அனுப்பப்பட்டு விடும். இன்று ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் இதுவரை பட்டியல் அனுப்பப்படவில்லை.

    சம்பளத்திற்கான நிதியை திரட்ட முடியாததால் அந்த பணியை நிறுத்திவிட்டனர். எனவே நாளை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்ற நிலை உருவாகி உள்ளது. இன்னும் எத்தனை நாள் கழித்து சம்பளம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

    இதற்கிடையே வேறு எந்த முறையில் சம்பளம் வழங்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தலைமை செயலாளர் அஸ்வினி குமார், நிதித்துறை செயலாளர் கந்தவேலு ஆகியோரை அழைத்து பேசினார்.

    இனி நிதி ஒதுக்கப்பட்டாலும் கூட சம்பள பட்டியல் தயாரித்து அதன் பணிகளை முடிப்பதற்கு 2 நாள் ஆகும். எனவே நாளை சம்பளம் கிடைப்பதற்கு எந்த வாய்ப்பு இல்லை. வேறு நிதிகளை கொண்டு சம்பளம் கொடுப்பதாக இருந்தால் 2 அல்லது 3 நாட்களில் சம்பளம் கிடைக்கலாம்.

    பட்ஜெட் மசோதா நிறைவேறியதற்கு பிறகு தான் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்றால் வாரக் கணக்கில் கூட ஆகலாம். புதுவையில் முதல் முறையாக இதுபோல ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PondicherryCM #Narayanasamy

    தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இந்த நிதியாண்டிலாவது அமைத்துத்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கமலகண்ணன், அரசின் நிதி நிலையை பொறுத்து தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    அப்போது உறுப்பினர் விஜயவேணி, ஒரு தீயணைப்பு வாகனமாவது கொடுங்கள். அதை நாங்கள் கையில் இழுத்துச்சென்றாவது விபத்து நடக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.

    காங்கிரஸ் உறுப்பினர்கள் தனவேலு, அனந்தராமன் ஆகியோர், கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி அளிக்கவுள்ளோம். இதன்மூலம் உரிய தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருவோம். உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.

    மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவிகள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது.

    இதற்காக பள்ளிகளில் பள்ளி நேரம் தவிர பிற நேரங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதோடு மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த உள்ளோம். ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கனவே இந்த குழுவின் கண்காணிப்பால் தேர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது.

    வரும் காலத்திலும் தேர்ச்சி வீதம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கோடை வெயிலின் தாக்கத்தில் விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி கேட்டபோது, அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

    புதுவையில் இன்று நடந்த கம்பன் விழாவில் தனது ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி மேடையிலேயே நன்றி தெரிவித்தார். #governorkiranbedi #narayanasamy
    புதுச்சேரி:

    புதுவையில் கம்பன் கலையரங்கில் இன்று கம்பன் விழா தொடங்கியது. விழாவை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, எனக்கு ஆங்கிலம்தான் தெரியும். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். தமிழில் பேசவா? ஆங்கிலத்தில் பேசவா? என்று கேட்டார்.

    மேலும் ஆங்கிலத்தில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும்? அவர்கள் கை தூக்குங்கள் என்றார். இதற்கிடையே தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க கல்வித்துறை அமைச்சர் மொழிபெயர்க்கலாமா? என கேள்வி எழுப்பினார்.

    விழாவில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்து பேசினார். கவர்னரின் ஆங்கில உரையை எனக்கு தெரிந்த ஆங்கில மொழிப்புலமையோடு மொழிபெயர்க்கிறேன். அதில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் என ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசிவிட்டு அமைச்சர் கமலக்கண்ணன் மொழி பெயர்க்க தயாரானார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி குறுக்கிட்டு, முதல்-அமைச்சர் நாராயணசாமி எனது உரையை மொழி பெயர்க்கட்டும் என கேட்டு கொண்டார்.

    இதையடுத்து நாராயணசாமி மொழிபெயர்க்க முன்வந்து கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்தார். அப்போது, எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா? என தெரியாது?

    ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன் என்று கவர்னர் கூறினார். அப்போது நாராயணசாமியும், நானும் அந்த நிமிடங்கள் மட்டும் நம்புகிறேன் என்றார்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி தற்காலிகமாக நாம் நண்பர்களாக இருக்கலாம் என நாராயணசாமியுடன் கை குலுக்கி விட்டு, இந்த நட்பு காலம் முழுவதும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறேன் என மைக்கில் கூறி தனது உரையை தொடங்கினார்.

    கவர்னரின் ஆங்கில உரையை முழுமையாக நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்தார்.

    பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். #governorkiranbedi #narayanasamy


    ×