search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poonam Agarwal"

    • வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
    • தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    புதுடெல்லி:

    வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    அதில் 2019, ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை பல்வேறு கட்சிகளுக்கு 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெறுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் புலனாய்வு பெண் பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த விவரங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    புலனாய்வு செய்வதற்காக தேர்தல் பத்திரத்தை சொந்த செலவில் வாங்கி அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். தேர்தல் பத்திரம் மீதான எனது ஆர்வத்தால் தேர்தல் பத்திரத்தை தடயவியல் பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பினேன். எனது முதல் 1,000 ரூபாய் தேர்தல் பத்திரத்தை ட்ரூத் லேப் தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக கொடுத்தபோது புற ஊதா கதிர்களின் கீழ் தனித்துவ அடையாள எண் மறைந்திருப்பது தெரியவந்தது

    இது ஒரு தனித்துவ அடையாள எண் என்பதை நிரூபிக்க மீண்டும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மேலும் ஒரு பத்திரத்தை வாங்கி

    தடயவியல் சோதனைக்கு அனுப்பினேன். அதிலும் தனித்துவ அடையாள எண் இருப்பதை உறுதி செய்தேன்

    இரு பத்திரங்களும் வெவ்வேறு எண்களை பத்திரங்களில் மறைத்து வைத்திருந்தன. எனவே பத்திரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட எண்களைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது.

    எஸ்பிஐ மற்றும் ஆர்டிஐ பதிலில் இந்த தனிப்பட்ட எண்கள் பதிவு செய்யப்பட்டு, தணிக்கைப் பாதைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. தனிப்பட்ட, மறைக்கப்பட்ட எண் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். எனவே இரண்டும் உண்மை. இது ஒரு பாதுகாப்பு அம்சம் மற்றும் தணிக்கை பாதைக்கும் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    ×