search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poster tear down"

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. சுவரொட்டியை கிழித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் தினேஷ் பாபு (வயது 29), இவர் கச்சிராயபாளையம் சாலையில் கிருபா எலெக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று தனது கடை முன்பு ஒட்டப்பட்டிருந்த பாஜகவின் சுவரொட்டி கிழித்துள்ளார். அப்போது பாஜக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் 8 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்பாபுவை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பீர் பாட்டிலை கடை போர்டின் மீது வீசித் தாக்கினார். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறி ஓடியது.

    இது குறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் (39) கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நகரத் தலைவர் சத்யா, மற்றும் சங்கராபுரம் அருகே அவிரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் ஆகிய 2 பேர் மீதும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாஜக நகர தலைவர் சத்யா கொடுத்த புகாரின் பேரில் தினேஷ் பாபு, அவரது சித்தப்பா மற்றும் பாலசுந்தர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அனுமதி இல்லாமல் ஒட்டப்பட்ட சுவரொட்டியை கடைஉரிமையாளர் கிழித்த சம்பவம் குறித்து தனித்தனியாக 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×