என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "power generation shutdown"
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் நேற்று நள்ளிரவில் இருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.இதுபற்றி அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாறால் முதல் அணுஉலையும் இயங்காமல் இருக்கிறது. இதனால் தற்போது மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், கோவளம், நெய்வேலி, கொக்கிலமேடு, வெண்புருஷம், சூலேரிக்காடு, கல்பாக்கம் பகுதி மீனவ கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் காற்றின் வேகம் அதிகரித்து சாரல் மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை, காற்று, கடல்சீற்றம் என அப்பகுதி கடலோர கிராம மக்களும், மீனவர்களும் பீதியில் உள்ளனர். இந்த நேரத்தில் அணு உலையும் நிறுத்தப்பட்டதால் கடலோர பகுதி மீனவர்களிடையே தற்போது சுனாமி பயமும் நிலவி வருகிறது.