என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prahlad Singh Patel"
- இதுவரை 9.94 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது.
கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.