search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman killed"

    நாகர்கோவில் அருகே பணத் தகராறில் கர்ப்பிணி மனைவியை அடித்து கொலை செய்த கணவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி குஞ்சன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுபிதா (26).

    இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். மேலும் சுபிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    சமீப காலமாக சுபிதாவுக்கும் கணவர் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 23-ந்தேதி மணிகண்டன், தான் வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்ததாக கூறி மனைவி சுபிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் அதை மறுத்தபோதும் கர்ப்பிணி என்றும் பாராமல் சுபிதாவை சரமாரியாக அடித்து, உதைத்து உள்ளார். மேலும் காலாலும் அவரை உதைத்ததாக தெரிகிறது. அக்கம், பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து அவர்களை சமரசம் செய்து வைத்தனர். கணவர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் சுபிதா ஆஸ்பத்திரிக்கு உடனே செல்லாமல் வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சுபிதாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்த்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    டாக்டர்கள் சுபிதாவிடம் விசாரித்த போது கணவர் தாக்கியது பற்றி அவர் கூறினார். சுபிதாவின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுபிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நடந்த சம்பவங்களை சுபிதா கூறியதை தொடர்ந்து மணி கண்டன் மீது கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனால் பயந்துபோன சுபிதா ஆஸ்பத்திரியில் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. சுபிதா மரணமடைந்ததால் அவரது கணவர் மணிகண்டன் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை கைது செய்ய 2 போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படைகள் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சுபிதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் மணிகண்டன் மீது அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. மணிகண்டன் தனது தாய் பேபியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்து உள்ளார். அப்போது அவரை பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக மணிகண்டன் தாக்கி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பேபி தனது வீட்டின் முன்பு நடுரோட்டில் வைத்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய வழக்கில் மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில்தான் மனைவியை அடித்து கொன்ற வழக்கும் அவர் மீது பதிவாகி உள்ளது. தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் மணிகண்டனின் தாய் பேபி, மனைவி சுபிதா ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மணிகண்டன்-சுபிதா தம்பதிக்கு 5 வயதிலும், 1¾ வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளது. மணிகண்டன் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுபிதா இறந்து விட்டார். போலீசார் தேடுவதால் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஆதரவாக இருந்த பாட்டி பேபியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த 2 குழந்தைகளும் தற்போது தவித்தபடி உள்ளன. 

    5 மாத கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது அருதங்குடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா (வயது 28). இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலையில் புஷ்பா வீட்டின் அருகில் கரும்பு தோட்டத்தில் உள்ள பம்புசெட்டு கிணற்றுக்கு குளிக்க சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் கிடந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து சென்று புஷ்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க கொண்டுவரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு நேராக புஷ்பாவின் வீட்டிற்கே சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகிய 3 பேரை திருப்பால பந்தல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்தன. ராமதாஸ் மும்பையில் கூலிவேலை பார்த்து வந்தார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் புஷ்பாவுக்கும், ராமதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதையொட்டி கடந்த 4 நாட்களாக ராமதாஸ் உள்பட 3 பேரிடம் போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தினர். இதில் கொலையாளி யார் என்பது போலீசாருக்கு அடையாளம் தெரிந்தது. அவரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று கொலையாளி கைது செய்யப்படுவான் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×