search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price forecast"

    • தக்காளி சாகுபடி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு தென்னை,நெல்,வாழை,கரும்பு,மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியில் உரம்,பூச்சி மருந்து செலவு,கூலி உள்ளி ட்ட வை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால் போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.குறிப்பாக தக்காளி சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.அறுவடை செய்த தக்காளியை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு போய் விற்று விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலையே உள்ளது.போக்குவரத்துச் செலவு,அறுவடைக் கூலி கூட கட்டுப்படியாகாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது.இதனால் பல விவசாயிகள் தக்காளி விளைந்து கிடக்கும் நிலத்தை மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றும் நிலையும்,டிராக்டரை விட்டு உழவு ஓட்டி அழிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.

    இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விலை முன்னறிவிப்புப் படி தக்காளி விலை உயரும் வாய்ப்பு உள்ளதா என்பது விவசாயிகளின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.அதேநேரத்தில் விலை உயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழ்நா டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுகிறது.விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு ஓட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி,வெண்டை,கத்தரி போன்ற காய்கறிகளின் விலையில் சந்தை ஆய்வு களை மேற்கொ ண்டது.அதன்படி நடப்பு மே மாதத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ .24 முதல் ரூ .27 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலமாக இருப்ப தால் மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தக்காளி விவசாயி களிடையே ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தக்காளியை அழித்து விட்டு மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் எண்ணத்திலிருந்த விவசாயிகளும் இந்த அறிவிப்பால் முடிவை தள்ளிப் போடுவது குறித்து யோசிக்கத் தொடங்கி யுள்ளனர்.ஆனாலும் தற்போது தக்காளி விலை உயர்வது குறித்த வேளா ண் பல்கலையின் அறிவிப்பு குறித்து நம்பிக்கையின்மையே விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.தக்காளிக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.தக்காளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகவே தக்காளி விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

    ×