search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price Reduction"

    • தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.
    • இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.

    பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு திரில்லர் பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.

    இப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

    அண்மையில் படத்தை குறித்து சர்ச்சை ஒன்று எழுந்தது. படத்தின் VFX காட்சிகளை கையாண்ட நிறுவனம் குறித்த நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை செய்து தரவில்லை எனவும், ஒப்பந்தத்தில் போடப்பட்ட தொகையை விட அதிகமாக கேட்கிறார்கள் என கோயம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் பார்த்திபன். அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிறுவனமும் பதிலுக்கு படத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் பார்த்திபன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு குறைத்துள்ளார். படம் வெளியாகி சில நாட்களுக்கு மட்டுமே இச்சலுகை என குறிப்பிட்டுள்ளார்.

    தற்பொழுது அனைத்து தனியார் கார்பரேட் திரையரங்குகளிலும் ஒரு சிக்கெட்டின் விலை சராசரியாக 150 முதல் 200 ரூபாய் வரை இருக்கிறது. இதனால் பார்த்திபனின் இந்த முடிவு பாராட்டுக்குறியது.

    இதுக் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் " எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100/- மட்டுமே, இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
    • மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது.

    திருவனந்தபுரம்:

    சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.

    இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் 1,100 ரூபாயக்கு மேல் விற்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தில் ரூ.911-க்கும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் ரூ.912-க்கும், ஆலப்புழா மற்றும் திருச்சூரில் ரூ.915-க்கும், பத்தினம்திட்டா மற்றும் கொச்சியில் ரூ.920-க்கும், பாலக்காட்டில் ரூ.921-க்கும், கண்ணூர், காசர்கோடு மற்றும் வய நாட்டில் ரூ923-க்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.

    ×