என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » prime minister house
நீங்கள் தேடியது "Prime Minister House"
- செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
- பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து விளக்கி இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து விபரம் கேட்டறிந்தார்.
விழுப்புரம்:
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் குறித்து செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து விளக்கி இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து விபரம் கேட்டறிந்தார்.
மேலும் நிலுவையில் உள்ள வீடுகளை வரும் 15.8. 2022-க்குள் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது உதவி திட்ட இயக்குனர் (வீடுகள்) குருசாமி வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள்) நந்தகோபாலகிருஷ்ணன் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சம்பந்தம் மற்றும் உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி நடக்கிறது. #Pakistan #LaxuryVehicles
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.63 ஆயிரம் கோடி) நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் பேசிய நிதி மந்திரி ஆசாத் உமர் தகவல் வெளியிட்டார். பாகிஸ்தானில் மாற்றங்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து உள்ள புதிய பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
முதலில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்தார். தனக்கு 2 ஊழியர்கள் போதும், 2 கார்கள் போதும் என கூறினார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவற்றில் விலை உயர்ந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் வாகனங்கள் 4, 2003-2013 மாடல் கார்கள் 8 அடங்கும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. #Pakistan #LaxuryVehicles

×

X