என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prohibition on issuance of final order"
- பினாமி சட்டத்தின் கீழ் மே 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை அதிகாரி நோட்டீஸ்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், திமுக எம்.பி கதிர் ஆனந்திற்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் மே 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை அதிகாரி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை ஜூன் 3வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.