என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Psychological counseling program"
- மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
- மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.
உடுமலை:
வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டம் வாரியாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் தனித்தனியாகவும், குழுவாகவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் கொரோனாவுக்கு பின் பள்ளிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் உளவியல் ஆலோசகர்களிடம் கூறி தெளிவு பெற்றனர்.இதனால் பல பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. தவிர தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. மாவட்டம்தோறும் ஒரு ஆலோசகர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.இதனால் பள்ளிகளில் தொடர்ச்சியான ஆலோசனை வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.
இது குறித்துஉளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:-
மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. இப்போது தேர்வு பயம் நீக்குவதற்கும் புகார் அளிப்பதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் பொதுவான சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். மேலும் அவ்வாறு தேடிச்சென்று ஆலோசனை பெற வேண்டும் என்ற மனநிலை வருவதற்கும் ஒரு தெளிவு வேண்டும்.90 சதவீத மாணவர்களிடம் அது கிடையாது. அவர்களிடம் கலந்துரையாடினால் மட்டுமே என்ன பிரச்சினை என்பதை கண்டறிய முடியும். இதற்கு பள்ளிகளுக்கான உளவியல் ஆலோசனை திட்டம் கட்டாயம் தேவையாகதான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கல்வித்துறை சார்பில் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதாவது உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இயல்பான நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்கும் திறன் மட்டும் சற்று குறைவாக இருக்கும்.அத்தகைய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் பலரும் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் அரசின் சலுகை பெற்று பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.
அதன்படி தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு எழுதாமல் தவிர்ப்பது, தேர்வெழுத வழக்கமாக ஒதுக்கப்படும் நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது, கணித பாடத்திற்கு கால்குலேட்டர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சலுகையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் பலர் தமிழ் பாடத்தை எழுதாமலும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் ஆங்கில பாடத்தை எழுதாமலும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:-
பல பள்ளிகள் கற்றல் குறைபாடு என்ற அரசின் சலுகையை பயன்படுத்தி மொழிப்பாடத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.அத்தகைய விலக்கு பெற்ற மாணவ, மாணவிகள் உண்மையில் அந்த பாடங்களை பயில்வதில் மந்த நிலையில் தான் உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அத்தகைய சலுகையை பயன்படுத்திக் கொண்டனவா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்