search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railways Minister"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வட மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டத்தால் 35 ரெயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
    • இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

    பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர். ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின. இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், அதற்கு பதில் நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக டெல்லி கேட் மற்றும் மஜ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

    இந்நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார். #IndiaPakistanWar #Pakistan #RailwayMinister #SheikhRashidAhmad
    இஸ்லாமாபாத்:

    புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த பரபரப்பான சூழலில், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை அடிக்கடி கூறி வரும் அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெரும்பாலும் போர் சூழலுக்கு வந்துவிட்டது. அவசரகால சட்டங்களை ரெயில்வே ஏற்கனவே பின்பற்ற தொடங்கி விட்டது. இந்த போர் கொடூரமானதாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் முற்றிலும் தயாராகி விட்டது’ என்று தெரிவித்தார்.

    இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் எனக்கூறிய ஷேக் ரஷித், அதுவே இறுதிப்போராகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவுடன் போரா அல்லது அமைதியா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும், எனவே அடுத்த 72 மணி நேரம் முக்கியமானது என்றும் கூறினார். #IndiaPakistanWar #Pakistan #RailwayMinister #SheikhRashidAhmad 
    ×