என் மலர்
நீங்கள் தேடியது "Rakshan"
- மொய் விருந்தை கதைக்கருவாக கொண்ட படம்.
- படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர். மணிகண்டன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்தின் நாயகனாக ரக்ஷன் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சி.R.மணிகண்டன் கூறுகையில்..,
"நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் அனைவருக்கும் உதவி கிடைக்கும்.
இது எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தந்தது. இதை மையமாக வைத்து உருவாகியது தான் இந்தப்படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று தலைப்பு வைத்துள்ளோம். இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா" என்றார்.
பாலுமகேந்திராவின் "வீடு" படப்புகழ் 'ஊர்வசி' அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் ஆயிஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’.
- இந்த படத்தை இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார்.
இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இந்த படத்தில் ரக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சச்சின் வாரியர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபி துரைசாமி ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். பள்ளி கால நினைவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது.

அதாவது, 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருது என்று அறிவித்து, 'விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் - நன்றி' என்று எழுதப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Energetic team.... pic.twitter.com/RQkzmGfCeD
— Desingh Periyasamy (@desingh_dp) July 19, 2018






