search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramanathapuram fish price hike"

    ராமநாதபுரத்தில் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் மீன்களின் விலை அதிக விலைக்கு உயர்ந்துள்ளது.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல்சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லும் மீன்பிடி படகுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் பகுதிக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. நாட்டுப் படகுகளில் கொண்டு வரப்படும் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அசைவ பிரியர்கள் காய்கறி கடைகளை தேடி செல்கின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பகுதிக்கு தினந்தோறும் கீழக்கரை, ஏர்வாடி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல் பகுதியிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரம் சாலை தெரு, பாரதி நகர் பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடிக்கடி புயல் மையம் கொண்டது. இதனால் கடல் சீற்றமாக இருந்தது.

    இதையடுத்து மீன்வர்கள் கடலுக்கு செல்ல அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு மீன் வரத்து குறைந்தது. தொடர்ந்து மார்க்கெட்டில் மீன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது கடல்சீற்றம் குறைந்து காணப்படுகிறது. மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    தற்போது நாட்டுப் படகிலும் குறைந்த அளவு மீன்களே வரும் நிலையில் அவைகள் ராமநாதபுரம் நகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. வரத்து குறைவால் அசைவ பிரியர்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் விலை கொடுத்து அதிருப்தியுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

    மீன் மார்க்கெட்டில் வெளமீன், கிலக்கான், மாவுளா, போன்ற மீன்கள் கிலோ ரூ.300க்கும், முரல் மீன் கிலோ ரூ.300 வரையிலும், கும்ளா மீன் ரூ.250 வரையிலும், நண்டு, இறால் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்களின் பார்வை காய்கறி கடைகளின் பக்கம் திரும்பி உள்ளது.

    ×