search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramcharitmanas"

    • யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலகக்குழுவின் 10-வது கூட்டம், மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் நடைபெற்றது.
    • பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்களை பரிந்துரை செய்தார்

    புதுடெல்லி:

    பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலகக்குழுவின் 10-வது கூட்டம், மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் நடைபெற்றது.

    இதில் இந்தியாவின் துளசி தாசர் எழுதிய ராமசரித மனாஸ், விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்து பிரதிகள் உள்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 20 பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டன.

    இந்தியா சார்பில் பேசிய இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கலாநிதி பிரிவின் டீன் மற்றும் துறைத்தலைவரான பேராசிரியர் ரமேஷ் சந்திர கவுர், ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்களை பரிந்துரை செய்தார். பின்னர் விவாதங்களுக்கு பிறகு ராமசரிதமனாஸ், பஞ்சதந்திர கதகைள் ஆகியவை யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் நினைவு உலகப் பதிவேட்டில் இடம்பெறுவதற்கு (அங்கீகாரம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×