search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravindranath"

    • பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

    ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019ம் ஆண்டில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இதைதொடர்ந்து, ஓ.பி.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
    தேனி :

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

    ம.நீ.ம - 29

    நாம் தமிழர் - 198
    ×