என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RCBvsLSG"
- இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும்.
- லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ரன்னுக்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த க்ரீன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்சிபி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஆர்சிபி தோல்வி உறுதியானது.
இறுதியில் ஆர்சிபி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ அணி ௨௮ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.
- லக்னோ அணியில் டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்களூரு:
17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்- டிகாக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 20 ரன்னிலும் அடுத்து வந்த படிக்கல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் அரைசதம் விளாசினார். 15 பந்துகள் சந்தித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி நேரத்தில் பூரன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். குறிப்பாக டாப்லீ ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய பெங்களூரு 212 ரன்கள் குவித்தது.
- விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அரை சதமடித்தனர்.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 19 பந்தில் 62 ரன்னில் அவுட்டானார்.
ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
- விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசினார்.
- கேப்டன் டூ பிளெசிஸ்- கிளென் மேக்ஸ்வெல் இருவரும் பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டனர்.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டினார். மறுமுனையில் டூபிளெசிஸ் 35 பந்துகளில் அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.
மேக்ஸ்வெல், டூ பிளெசிஸ் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர்.
மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்