search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reduction in electricity bill"

    • பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம்.
    • லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டடங்களுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்பு யூனிட்டுக்கு 8.15 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதுதவிர கிலோவாட்டுக்கு 204 ரூபாய் நிலை கட்டணமும் விதிக்கப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்போர் நல அமைப்புகள், மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்படுமென 18-ந்தேதி முதல்வர் அறிவித்தார். அதற்கான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

    10 வீடுகள் அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, லிப்ட் வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாய் என்பது 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம். பொது பயன்பாட்டு மின் இணைப்பு, 1டி என்ற வகையில் இருந்தது. இதில் யூனிட்டுக்கு 5.50 ரூபாய் மின் கட்டணம் செலுத்த தகுதியான பொது பயன்பாட்டு இணைப்புகளை 1இ என, வகை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1இ என்ற தாழ்வழுத்த மின் இணைப்பு வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    அரசு உத்தரவுப்படி மின்வாரியம் 1இ இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. தகுதியானவர்கள் 1டி இணைப்பை 1இ என்று வகை மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என்றனர். குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு 204 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பயன்படுத்தும் மின்அளவை காட்டிலும் நிலை கட்டணம் தான் பெரும் சுமையாக வருகிறது. வாடகை வீடுகளில் வசிப்பவருக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது.எனவே வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் எதிர்பார்த்து ள்ளனர்.

    ×