என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Remal Cyclone"
- ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
- கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து ரீமல் என பெயரிடப்பட்ட இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காள தேசத்தின் கேபு பாராவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.
சூறாவளி காற்றுடன் மிக கனமழையும் பெய்தது. இதனால் மேற்கு வங்காளத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்நாபூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
ஏராளமான இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
புயலால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் சுந்தரவன காடுகளில் கோசாபா பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். இதுதவிர மேலும் ஒருவர் என மொத்தம் 2 பேர் புயலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH | West Bengal CM Mamata Banerjee conducted an aerial survey of the cyclone-affected areas in South 24 Parganas.
— ANI (@ANI) May 29, 2024
(Source: All India Trinamool Congress) pic.twitter.com/sQVmO5O3K8
- மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
- பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் புதிதாக உருவான ரீமல் புயல் சின்னம் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஐதராபாத், நாகர் கர்னூல், மேடக், கங்கா ரெட்டி, மேட்சல், மல்காஜ்கிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இடி மின்னலில் சிக்கி நாகர் கர்னூல் மாவட்டத்தில் 7 பேரும், ஐதராபாத்தில் 2 பேரும், மேடக்கில் 2 பேரும் பலியாகினர். நல்கொண்டா மாவட்டத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் மல்லேஸ் ( வயது 38), அவரது மகள் அனுஷா (12), மற்றும் சென்னம்மா (38), ராமுடு (36) ஆகியோர் இறந்தனர்.
மேலும் சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மற்றும் சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் மழைக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.
- 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
- சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்.
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.
அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
மேலும், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.
தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- நாளை நள்ளிரவு தீவிர புயலாக வங்காளதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும்.
- கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது. அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளது.
அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு தீவிர புயலாக வங்காளதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த ரீமால் புயலின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு என்பது குறைவு என்றும், மாறாக தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்