என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » royal challangers bangalore
நீங்கள் தேடியது "royal challangers bangalore"
- வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் 11.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூரு.
- பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இதையடுத்து, டோனி தனி ஒருவனாக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். #IPL2019 #ViratKohli
ஐபிஎல் கிரிக்கெட்டின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது.
மொயீன் அலி ஒத்துழைப்புடன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். கடைசியில் சிக்சர், பவுண்டரியுமாக விளாசினார். விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும்.
இறுதியில், பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.
ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். #IPL2019 #ViratKohli
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #IPL2019 #CSKvRCB #SureshRaina
ஐபிஎல் 12-ஆவது சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 70 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5, ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #CSKvRCB #SureshRaina
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே 33 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பர்திவ் படேலும் இறங்கினர். ஆனால், கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் நிதானமாக விளையாடினார். பர்திவ் படேல் 33 ரன்களில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
இவர்கள் இருவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பெங்களூர் அணி இறுதியில், 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றினார். பென் லாப்லின், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. #IPL2018 #RRvRCB
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே திரிபாதியுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 99 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், ரகானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகினார். அடுத்து ஆடிய கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார்.
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
ஜெய்ப்பூரில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.
இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி. IPL2018 #KXIPvRCB
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆனால், பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணி திணறியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன்னும், லோகேஷ் ராகுல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேலும், விராட் கோலியும் இறங்கினர்.
இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 8.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. விராட் கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். IPL2018 #KXIPvRCB
விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #DDvRCB
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும், ஜேசன் ராய் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 6-வது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன் எடுத்து அசத்தினார். விஜய் சங்கர் 21 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், மொயின் அலி, மொகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேல், மொயின் அலி இறங்கினர். படேல் 6 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 18 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.
அவர்களை தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், டி வில்லியர்சும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்தனர்.
கோலி 40 பந்தில் 70 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மந்தீப் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் கான் 11 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பெங்களூர் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், லாமிச்சென், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvRCB
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X