என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sabarimala Issue"
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதால் கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினை கேரளாவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது சபரிமலை பிரச்சினை பற்றி பிரசாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரிகள் டிகா ராம் மீனா எச்சரித்து இருந்தார்.
ஆனால் இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் இதுதொடர்பாக கூறியதாவது:-
சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசு எடுத்த நிலைப்பாடு பற்றி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் 100 சதவீதம் விவாதிக்கப்படும். இதில் யாரும் தலையிட முடியாது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும்.
சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய உதவிய ஆளும் கம்யூனிஸ்டு அரசின் மக்கள் விரோத செயலை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா பிரசாரம் செய்யும். நாங்கள் அப்படி பிரசாரம் செய்வதை தடுக்க தேர்தல்கமிஷனுக்கு அதி காரம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். #BJP
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதியின் பெயரால் இழிவு செய்து சனாதனவாதிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதிவெறியும் மதவெறியும் கூட்டாளிகள் தான் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அது இந்த பிரச்சனையிலும் மெய்யாகியுள்ளது.
சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை கேரள மாநில அரசுக்கு இருக்கிறது.
தற்போது வழிபாடு செய்துள்ள இரண்டு பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளோ அல்லது கேரள அரசின் தூதுவர்களோ அல்ல. அவர்களும் பக்தர்கள் தான். அவர்கள் வழிபடச் சென்றபோது ஆண் பக்தர்கள் உறுதுணையாக இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் இப்போது மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதன சக்திகள் யார் என்பதையும் அந்த சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்.
சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் கல்வீச்சிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டுவதிலும் சனாதனவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.
விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM
சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #KeralaBJPBandh #SabarimalaIssue
கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கேரள சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருவதால் சட்டசபை கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபை நடுவே சென்று சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் சபாநாயகர் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகரால் எம்.எல்.ஏ.க்களை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஆனாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் காங்கிரசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனே எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதலா பினராயி விஜயனுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #Sabarimala #KeralaAssembly
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இவற்றை கட்டுப்படுத்த சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இதற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் கேரள சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சபரிமலை தொடர்பாக பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. ஒரு நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர்.
அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.
மேலும் கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.
சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.
அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.
முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-
இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற விஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது.
அப்போது அய்யப்பனை தரிசிப்பதற்காக சென்றிருந்த தடை செய்யப்பட்ட வயது பெண்களை, நிலக்கல், பம்பை, சன்னிதானம் போன்ற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பி சென்றனர்.
இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சபரிமலை தந்திரிகளின் தாழமோன் குடும்பத்தை சேர்ந்தவரும், அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை தடுப்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதாவது, சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயது பெண்கள் யாராவது நுழைந்தால், கோவிலை மூடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் சிலர் அங்கே ரத்தம் சிந்துவார்கள் என தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொச்சியில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். ராகுல் ஈஸ்வருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் #SabarimalaVerdict #SabarimalaIssue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்