search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAFFChampionship2023"

    • பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
    • ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

    பெங்களூருவில் இன்று தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த போட்டியை இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

    இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது.

    ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.

    இதற்கிடையே, போட்டியின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

    ஆடுகளத்தில், இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், இக்பாலை த்ரோ-இன் எடுக்க விடாமல் தடுத்து, அவரது கையிலிருந்து பந்தை தட்டிச் சென்றார். இது இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    பின்னர், போட்டியின் நிர்வாகிகள் தலையிட்டு வீரர்களை அமைதிப்படுத்தி மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர்.

    இதைதொடர்ந்து, ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

    இந்த ஆட்டத்தின் முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×