என் மலர்tooltip icon

    கால்பந்து

    • 2 லெக்கிலும் சேர்த்து ஆர்சனல் ரியல் மாட்ரிட்டை 5-1 என பந்தாடியது.
    • பார்சிலோனா 5-3 என டார்ட்மன்-ஐ வீழ்த்தியது.

    UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் 2ஆவது லெக் ஆட்டங்கள் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடைபெற்றன.

    ஒரு காலிறுதியின் 2ஆவது லெக்கில் ரியல் மாட்ரிட்- ஆர்சனல் அணிகள் மோதின. முதல் லெக்கில் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் அணி 4 கோல் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரியல் மாட்ரிட் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சனல் அபாரமாக விளையாடி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் இரண்டு லெக்கிலும் சேர்த்து 5-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு காலிறுதி 2ஆவது லெக்கில் இன்டர் மிலான்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என சமநிலை பெற்றது. முதல் லெக்கில் இன்டர் மிலான் 2-1 என வெற்றி பெற்றதால் மொத்தமாக 4-3 என வெற்றி பெற்றது.

    4ஆவது காலிறுதியில் ஆஸ்டன் வில்லா- பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா 3-2 என வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் முதல் லெக்கில் பிஎஸ்ஜி 3-1 என வெற்றி பெற்றிருந்ததால் மொத்தமாக 5-4 என பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.

    4ஆவது காலிறுதியில் பார்சிலோனா- டார்ட்மன்ட் அணிகள் மோதின. இதில் டார்ட்மன்ட் 3-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றிருந்ததால் பார்சிலோனா 5-3 என வெற்றி பெற்றது.

    மே 1ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் முதல் லெக்கில் பிஎஸ்ஜி- ஆர்சனல், பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. 2ஆவது லெக் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
    • 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

    மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 13 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
    • இந்த சீசனில் கோகுலம் கேரளா அணியிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

    இந்திய பெண்கள் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிசா எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாம்பியன் படத்தை உறுதி செய்துள்ளது.

    67ஆவது நிமிடத்தில் சவுமியா குகுலோத் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாகவும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்குமான கோலாகவும் அமைந்தது.

    ஆண்களுக்கான கால்பந்து தொடர் இந்தியன் லீக்காக (I-League) நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தேசிய கால்பந்து லீக்காக நடைபெற்றது. அப்போது 2003-04-ல் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2003-ல் ஏசியன் கிளப் சாம்பியன்ஷிப்பை வென்றது.

    அதற்குப் பிறகு தற்போதுதான் 21 வருடத்திற்குப் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணி கோகுலம் கேரளா அணியைத் தவிர மற்ற அனைத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் விளையாட வேண்டியுள்ளது. இதில் தோற்றாலும், டிரா செய்தாலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.

    • 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
    • 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.

    எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.

    முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.

    முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.

    சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.

    இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.

    முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

    • ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
    • மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.

    அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.

    இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.

    2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.

    • 2015ஆம் ஆண்டு 71 மில்லியன் டாலருக்கு மான்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது.
    • 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் பெல்ஜியத்தை சேர்ந்த கெவின் டி ப்ரூயின் (வயது 33), அந்த அணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

    குட் பை சொல்வதற்கான நேரம், சாம்பியன் அணியுடன் இறுதி மாதங்களில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இதை சொல்வது எளிதல்ல. ஆனால் கால்பந்து வீரர்களான எங்களுக்கு, இறுதியாக ஒரு நாள் வரும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த நாள் இங்கே எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த நகரம். இந்த கிளப். இந்த மக்கள்... எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை! என்னவென்று யூகிக்கவும் - நாங்கள் எல்லாவற்றையும் வென்றோம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், விடைபெற வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ப்ரூயின் 2015ஆம் ஆண்டு வோல்ஸ்பர்க் அணியில் இருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு 71 மில்லியன் டாலருக்கு டிரான்ஸ்பர் ஆனார். 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.

    பிரீமியர் லீக்கில் 280 போட்டிகளில் விளையாடி 118 கோல்கள் அடிப்பதற்கு துணை புரிந்துள்ளார். மொத்தமாக சிட்டி அணிக்காக 413 போட்டிகளில் விளையாடியுள்ளார். 106 கோல் அடித்துள்ளார். இரண்டு முறை இங்கிலாந்தின் PFA வீரர் விருதை வென்றுள்ளார்.

    வேறு அணிக்கு செல்வது குறித்து ப்ரூயின் இன்னும் முடிவு செய்யவில்லை. 

    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.

    சென்னை:

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
    • 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிய போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு ஃபெரன் டொரெஸ் 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் டேனி ஆல்மோ பெனால்டி முறையை கோலாக மாற்றினார். இதன் காரணமாக பார்சிலோனா அணி போட்டியின் முதல் பாதி முடிவதற்குள் 2-0 என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தியது.

    பிறகு நடந்த இரண்டாம் பாதியிலும் பார்சிலோனா அணி போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறவில்லை. இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் முயற்சித்தன. எனினும், பார்சிலோனா அணிக்கு போட்டியின் 77வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி மூன்றாவது கோல் அடித்தார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 

    • முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது.

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    37-வது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71-வது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.

    தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா 14 போட்டிகளில் 10-ல் வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    • போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும்.
    • கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது.

    ஆக்லாந்து:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

    ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதன் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை தோற்கடித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

    போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும். கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண்பது இது 3-வது முறையாகும்.

    • சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது.
    • மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்- மெஸ்சி

    உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்தார்.

    இந்த நிலையில் "உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. உண்மையிலேயே இரண்டு போட்டிகளிலும் விளையாட விரும்பினேன். சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது. மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்" என மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும்.

    • ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் இதுவரை 31 கோல்கள் அடித்துள்ளார்.
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து கடந்த ஆண்டு ரியல்மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார்.

    2024-25 அவருடைய அறிமுக சீசன். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் அதன்பின் அபாரமாக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அறிமுக சீசனில் இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 31 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 3 கோல்கள் தேவை. இதனால் ரொனால்டோ சாதனையை முறியடித்து விடுவார். ஏற்கனவே பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ நசோரியா (30 கோல்- 2002-03) சாதனையை முறியடித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்பாப்வே கூறுகையில் "நான் ரொனால்டோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைவிட அதிக கோல்கள் அடித்தாலும், நான் சிறந்த வீரர் என்று அர்த்தம் கிடையாது. என்னுடைய முதல் சீசன் சிறப்பாக இருந்தது அவ்வளவுதான்.

    கோல் அடிப்பது முக்கியமானது. ஆனால் அதைவிட லா லிகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோபா டெல் ரே ஆகியவற்றை வெல்வது சிறந்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தன்னை மாற்றிக் கொள்வதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது என்னுடைய திறனை வெளிக்காட்டும் நேரம் இது. இங்கே சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இந்த சீசனில் முத்திரை பதிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்பாப்வே தெரிவித்துள்ளார்.

    எம்பாப்வே இந்த சீசனில் இன்று 12 போட்டிகளில் விளையாட உள்ளார். சிலியை சேர்ந்த ஜமோரானோவின் 37 கோல் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இவர் 1992-ல் செவியா அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அறிமுக சீசனில் 37 கோல்கள் அடித்திருந்தார்.

    ×