search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakshee Malikkh"

    • உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார்
    • ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

    உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

    ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    பிரிஜ் பூஷனுக்கு ஏன் பாஜகவில் சீட் கொடுக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கலாம்.

    "எத்தனை பேரின் பெற்றோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் வாய்ப்பு தருகின்றது. குற்றம் செய்து தண்டனை பெற்றவர்களின் பிள்ளைகள் கூட சீட் பெறுகிறார்கள். இங்கு பிரிஜ் பூஷனுக்கு எதிராக இதுவரை எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர் மகனுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
    • பிரிஜ் பூஷன் மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது

    உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

    ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ் பூஷன் வென்றார்

    நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம்.

    கைது செய்வதை விடுங்கள், இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட்டு கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்.

    ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் சீட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக நம் அரசு உள்ளதா?

    ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்ன?"

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.
    • சாக்சி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் சாக்சி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த செய்தியுடன், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்சி மாலிக், போராட்டத்தில் இருந்து விலகியதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவலை சாக்சி மாலிக் மறுத்துள்ளார்.

    "நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன், ரெயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம்" என சாக்சி கூறியிருக்கிறார்.

    ×