என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Sakthi Thirumagan"
- இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும்.
- அருவி, வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.
சென்னை:
இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் கண்ணன். இவர் காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்கமுடியாத நடிகராக அறியப்பட்டவர்.
இந்நிலையில், 'சக்தி திருமகன்' படத்திற்காக அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது comeback இந்தப் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் என பலரும் நடித்துள்ளனர்.
அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு 'சக்தி திருமகன்' படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்தா, நடன இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.
இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும். இந்தப் படத்தை மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
அழுத்தமான கதைசொல்லல் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த படம் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.