என் மலர்
நீங்கள் தேடியது "Samuthirakani"
- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
- இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- அருண்விஜய் நடிப்பில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.
- இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார்.
தமிழில் நாடோடிகள் படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். பின்னர் நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் பாலா இயக்கி அருண்விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய படமொன்றில் சமுத்திரக்கனி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்க, விஜி வசனம் எழுதுகிறார். படத்துக்கு 'பைலா' என்று பெயர் வைத்துள்ளனர். சனுகா இசையமைக்க ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.
- இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தலைக்கூத்தல்
இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைக்கூத்தல்
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா, நீங்க இத செய்வீங்களா ? என்ற வசனம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தலைக்கூத்தல்
இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைக்கூத்தல்
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பாடலான 'உச்சத்துல வெண்ணிலவு' பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ள இந்த பாடலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'ராஜாகிளி'.
- இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.
- அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி
இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 50-வது நாள் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு உயிரோடி இருக்கும் ஒரு திரைப்படம் கிடைத்திருக்கிறது. சில திரைப்படங்கள் ஒரு 100 வருடம் பேசப்படும். ஆனால், அயோத்தி திரைப்படம் திரையுலகம் இருக்கும் வரை பேசப்படும்.

அயோத்தி
நானும் சசிக்குமாரும் பார்க்கும் பொழுது அவர் ஒரு நான்கு கதையை கூறினார். அதில், அயோத்தி திரைப்பட கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும். அப்படி தான் 'அயோத்தி' திரைப்பட கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. சசிகுமார் இந்த படத்தில் நடிக்கவே இல்லை. அவருடைய இயற்கையான குணமே அப்படிதான். சசிகுமாரின் மனதிற்கு ஏற்றவாறு ஒரு படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.
- 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
- தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் .
தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியதாவது, 'ப்ரோ' நிகழ்ச்சிக்கு வந்த எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தக் கதையைக் கேட்டதும் சமுத்திரக்கனியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். ஏனென்றால் தெலுங்கு மொழியின் மீது நமக்கு பிடிப்பு மிகக் குறைவு. ஆங்கிலம் கலந்து பேசுவோம்.
எனக்கு தெலுங்கில் பத்து வாக்கியம் கூட பேச வராது. இடையில் நான்கு ஆங்கில வாக்கியங்கள் பேசுவேன். அதை சரி செய்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் நமது மொழியும் கூட இல்லை, முதல் நாளே ஸ்கிரிப்ட் ரீடிங்கிற்கு போனார். தெலுங்கை கற்று கொண்டார். நீங்கள் தெலுங்கு கற்று இவ்வளவு செய்ததால். நான் தமிழ் கற்று ஒரு நாள் தமிழில் உரை நிகழ்த்துவேன். தமிழ் கற்று திருக்குறள் சொல்ல விரும்புகிறேன். தெலுங்கு மொழியைக் கற்று எங்கள் கண்களைத் திறந்தவர் நீங்கள். நீங்கள் தெலுங்கை நன்றாகக் கற்றுக்கொண்டீர்கள். நம் தாய்மொழியில் இலக்கியம் மிகவும் வளமானது. அது தெரிந்தால். பல சிறந்த படங்களை எடுக்கலாம். மேலும் நம் மொழியில் தேர்ச்சி பெற்று இப்படி ஒரு படத்தை எடுத்த சமுத்திரக்கனிக்கு நன்றி. தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம்.
எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது தான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். 'ப்ரோ' படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் பேசினார்.
தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
- பவன் கல்யாண், சாய் தேஜ் நடிப்பில் உருவான இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.

தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில் ப்ரோ திரைப்படம் ஐஎம்டிபி-யில் நல்ல வரவேற்பை பெற்று 10-க்கு 9 மதிப்பெண் பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக இருப்பவர் சமுத்திரகனி.
- இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் சமுத்திரகனி 'அப்பா' படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, செல்போன் வைத்திருப்பவர்கள் படத்தை விமர்சனம் செய்யலாம் என்று ஆகிவிட்டது. நல்ல படங்கள் ஓடும். யார் விமர்சனம் செய்தாலும் அதன் தரம் குறையாது, விமர்சனம் செய்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நல்ல விஷயத்தை கூறினால் மக்கள் அதை வரவேற்பார்கள்.

என்னுடைய 'அப்பா' திரைப்படத்திற்கு நான் லஞ்சம் கொடுத்தேன். அது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. 'அப்பா' திரைப்படத்தை அரசு தான் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் நான் கஷ்டப்பட்டு, நானே தயாரித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வாங்கும் போது பணம் கொடுத்து தான் வாங்கினேன் என்று பேசினார்.
- இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.

விஷால் 34 படத்தில் இணைந்த கவுதம் மேனன் - சமுத்திரகனி
இந்நிலையி, 'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன் மற்றும் சமுத்திரகனி இணைந்துள்ளனர். இதனை நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Standing with three multi talented directors in one photo is a rarity and a must keep for ever. Welcome on board @menongautham bro and Kani anna in #Vishal34 directed by Hari sir. Gonna post this photo again next year and changing the no to four directors. :) :)
— Vishal (@VishalKOfficial) October 15, 2023
Looking forward… pic.twitter.com/jd37daz5SJ
- தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.
தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் இப்படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்க துர்கா பிரசாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது. டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமீரிடம் வருத்தம் தெரிவித்து ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
- இந்த அறிக்கையை விமர்சித்து சசிகுமார் பதிவிட்டிருந்தார்.
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சமுத்திரகனி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...

சமுத்திரகனி அறிக்கை
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!" காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சசிகுமார், ஞானவேல் அறிக்கையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.