search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandeshkhali women"

    • நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
    • பிரதமர் மோடி பராசத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக சொத்துகளை பறித்தல், பணம் பறித்தல், கூட்டு பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். தெருக்களில் ஆயுதங்களுடன் களமிறங்கி போராடியதால் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதையை திறந்துவைத்து, ரெயிலில் பயணம் செய்தார். தொடர்ந்து 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் உள்ள கச்சாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசினார்.

    பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் பராசத் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில், பராசத் பொதுக்கூட்டம் முடிந்ததும் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளி பெண்கள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அவர்களது குறைகளைக் கேட்ட பிரதமர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என பாஜக தலைவர் அக்னிமித்ரா பவுல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    ×