search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sapling planting"

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் செய்திருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணைத் தலைவர் பிரியா தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆணையர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கடமலைக்குண்டுவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் சின்னச்சாமி செய்திருந்தார்.

    • முதலியார்பேட்டை பா.ஜனதா சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பா.ஜனதா அரசின் 8 ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    முதலியார்பேட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நைனார் மண்டபம் கிளை எண் 20-ல் முன்னாள் கவுன்சிலர் மற்றும் முதலியார்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான செல்வகணபதி தலைமை யில், தொகுதி தலைவர் இன்பசேகர் முன்னிலையில், தொகுதி துணை தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கவுன்சிலர் மற்றும் வணிகப் பிரிவின் மாநில தலைவர் சத்யராஜ், கிளை தலைவர் இளஞ்செழியன், தொகுதி நிர்வாகிகள் சுதாகர், முருகன், சரவணன், மணி ராஜா, உதய சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மகிழ் வனம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகிழ் வனம் என்ற பெயரில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகிழ் வனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். லிட்ரசி பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, தாய்மண் அறக்கட்டளை பாலசுப்பிரமணியம், விநாயகர் கோயில் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, மகிழ் வனம் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாணிக்கம், பூபதி, ராமகிருஷ்ணன், மற்றும் லிட்ரசி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×