search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sarbananda sonowal"

    • ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஆயுர்வேத சிகிச்சை நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

    7வது ஆயுர்வேத தினம் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் நடத்திய நான் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறேன் என்ற பிரச்சாரத்திற்கு 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், கூறியதாவது: ஆயுர்வேதம் என்பது நோயைத் தடுக்கும் அறிவியல், இது ஒரு பண்டைய கால அறிவு பொக்கிஷம். ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும், அதன் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தற்போது உலகளவில் ஆயுர்வேத முறை அறியப்படுவதற்குக் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான, அயராத முயற்சிகள் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, ஆயுர்வேத சிகிச்சை இந்தியாவின் பண்டைய கால பாரம்பரிய சொத்து. மழைவாழ் மக்களுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை முறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.ஆயுர்வேதம், மற்ற சிகிச்சைகளை போல நோய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை பற்றி விவாதிப்பது இல்லை. நோய் வருவதை தடுப்பதைப் பற்றி பேசும் மருத்துவ விஞ்ஞானம் ஆயுர்வேதம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை.
    • சபஹரை பிராந்திய வளர்ச்சி துறைமுகமாக மாற்றுவது குறித்து ஆலோசனை

    ஈரான் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தெக்ரானில் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்துப் பேசினார்.

    அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். இது மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சுட்டிக்காட்டினார். ஈரான் துணை அதிபருடனான சந்திப்பு, வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரான் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஸ்டம் காசெமியுடன், இருதரப்பு சந்திப்பில் சோனாவால் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

    • பாரம்பரிய மருத்துவ துறையில் அமெரிக்கா, பிரிட்டன் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
    • ரஷ்யா பல்கலைக் கழகங்களில் ஆயுர்வேத கல்விக்கு இருக்கைகள் அமைக்க ஒப்பந்தம்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளதாவது:

    மருத்துவத் துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி உள்பட 24 நாடுகளுடனும், உலக சுகாதார நிறுவனத்துடனும் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

    இதே போல் பாரம்பரிய மருத்துவ துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்காக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ரஷியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் ஆயுதர்வேத கல்வி சார்ந்த படிப்புகளுக்கு இருக்கைகள் அமைக்க 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    கவுகாத்தி:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஹீமா தாஸ் உள்ளிட்ட மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், வேகமாக ஓடி சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று நடந்த மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் உள்ளிட்ட இந்திய மகளிர் குழுவினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஹீமா தாஸ், மச்சித்ரா, சரிதாபென் கெய்க்வாட் மற்றும் கரோத் உள்ளிட்ட மகளிர் குழுவினர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திறமையாக செயல்பட்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    அசாம் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மீது மம்தா பானர்ஜி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. #AssamNRC
    கொல்கத்தா:

    அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து அசாம் சென்றனர்.

    அங்கு சில்கார் விமான நிலையத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தாக்கியதாகவும் தெரிகிறது. அவர்கள் மீதும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் அசாம் மாநில முதல்- மந்திரி சர்பானந்தா சோனோவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்த 2 பெண் எம்.பி.க்கள், ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


    இ.பி.கோ. 354 (பெண்கள் மீது தாக்குதல் நடத்தி மானபங்கம் செய்தல்), இ.பி.கோ 341 (தவறான முறையில் தண்டித்தல்), இ.பி.கோ. 12பி (குற்ற நோக்கத்தில் தண்டித்தல்), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளாகும்.

    அலிப்பூர் போலீஸ் நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கரிம்பூர் எம்.எல்.ஏ.வுமான மகுயா மொய்த்ரா சார்பிலும், எம்.பி.க்கள் ககோலி சோஸ் தஸ்திதார் மற்றும் மம்தா தாகூர் சார்பில் சுபாங் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளன. அதில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில் பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அசாமில் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மேற்கு வங்காளம் முழுவதும் கருப்பு நாள் கடை பிடிக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், ரெயில் மறியல், சாலை மறியல், கருப்பு உடை அணிதல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பலவி தமான போராட்டங்களை நடத்தினர். #AssamNRC #MamataBanerjee  #SarbanandaSonowal
    ×