search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyabama University"

    • கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
    • மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார்.

    தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார்.

    இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240  மரக்கன்று நட்டார். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

    இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மரக்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Educational Psychologist ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. #SathyabamaUniversity #CampusInterview
    சென்னை:

    சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் வளாகத் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.



    நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார்.

    வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. இந்த 267 நிறுவனங்களில் 63 நிறுவனங்கள் மாணவர்களின் உலகத்தரம் வாய்ந்த கனவு நிறுவனங்களாக உள்ளன.

    புதிய உச்சமாக 186 மாணவர்கள் ரூபாய் 4.5 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.

    வேலைவாய்ப்பு வளாகத் தேர்வின் முக்கிய அம்சங்கள்:

    1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.18 இலட்சம்

    2. சராசரி ஆண்டு ஊதியம் ரூ.3.5 இலட்சம்

    3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

    4. எச்சிஎல் நிறுவனம் 100 மாணவர்களுக்கு ரூ.4.75 இலட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒற்றைக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட உச்ச எண்ணிக்கை ஆகும்.

    காக்சிசன்ட், விப்ரோ, டிசிஎஸ், நீல்சன், அமேசான், ஹிட்டாச்சி, டைட்டன், எச்சிஎல், ஆரக்கிள், வெரைசான், டாடா கம்யூனிகேசன்ஸ், ரெனால்ட் நிசான், கோட்டக், போஸ்ச், யமஹா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வளாகத்தேர்வில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. #SathyabamaUniversity #CampusInterview
    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MariazeenaJohnson #SathyabamaUniversity
    சென்னை:

    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.

    கல்வி மற்றும் சமூக சேவைகளில் முழு ஈடுபாடு கொண்டவர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் . மத்திய பெண்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜனாதிபதி விருந்து அளித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்யபாமா பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்றிதழ் அமைப்பின் (என்.ஏ.ஏ.சி.) சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஏ கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய வேந்தராக பதவி ஏற்ற டாக்டர் மரியஜீனா ஜான்சனுக்கு பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன் வாழ்த்து தெரிவித்தார். #MariazeenaJohnson #SathyabamaUniversity

    சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. #SathyabamaUniversity #SathyabamaConvocation
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.



    2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன், இணை வேந்தர் சசி பிரபா, பதிவாளர் S.S. ராவ், ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி, நிர்வாக இயக்குனர் லோக சண்முகம், மாணவ மாணவிகளின் டீன் சுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். #SathyabamaUniversity #SathyabamaConvocation
    ×