என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sathyendra jain"
- திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
- துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கு, முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறிய துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.
இந்நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறையில் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு வகைவகையான ஆடம்பர உணவு உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஹவாலா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயின் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு சத்யேந்திர ஜெயின் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவாலா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்