search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senate Chambers"

    • அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினார்.

    இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி (வயது52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருடைய நியமனத்துக்கான அறிவிப்பு வெளியாகும்.

    இதேபோல அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்க வாழ் இந்தியரான அவர் தேர்வு பெற்றுள்ளார்.

    ×