search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sentenced death"

    மும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். #MumbaiBlast #HanifSyed
    மும்பை:

    மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

    இரண்டு டாக்சிகளில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மும்பையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஹனிப் சையது, அவரது மனைவி பெமிடா மற்றும் அஷ்ரத் அன்சாரி ஆகிய 3 பேருக்கு மும்பை பொடா சிறப்பு கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    தீர்ப்புக்கு பின்னர் முகமது ஹனிப் சையது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல் நிலைமை மோசமானது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 1½ மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    முகமது ஹனிப் சையது உயிரிழந்தது பற்றி மும்பையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாக்பூர் சென்றனர்.

    முதல்கட்ட தகவலின் அடிப்படையில் முகது ஹனிப் சையது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதுவதாக நாக்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராணி போஸ்லே தெரிவித்தார். இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனையின் மூலம் தான் உறுதியாக தெரியவரும் என்றார்.
    பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vijayakanth #dharmapurigirlstudent #girlmolested
    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச்சேர்ந்த சதீஷ் (வயது22), ரமேஷ் (22) ஆகியோரை தேடி வந்தனர்.

    இவர்களில் ஏற்காட்டில் பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.

    இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களால், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்த வாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்கினால்தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். #vijayakanth  #dharmapurigirlstudent #girlmolested
    ஐதராபாத் நகரில் உணவகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கில் 44 உயிர்களை பறித்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும்  திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என மொத்தம் 44 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

    இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் நிறைவடைந்தது. கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் சவுத்ரிஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீனிவாஸ் தீர்ப்பளித்தார். 

    இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சும் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் இன்று நீதிபதி உத்தரவிட்டார். #Hyderabadtwinbomb #twinbombJudgement
    சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வர வங்காள தேச அரசு முடிவு செய்துள்ளது. #Roadaccident

    டாக்கா:

    வங்காளதேசத்தில் அதிக அளவில் சாலை விபத்துகளும் அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 29-ந் தேதி நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர்கள் பலியாகினர். எனவே, சாலை பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரோடு மறியல் போராட்டமும் நடந்தது. டாக்கா உள்பட மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். அதில் மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    இருந்தும் போராட்டம் ஓயவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தலைநகர் டாக்கா ஸ்தம்பித்தது.

    மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்காள தேச அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்ததை நடத்தினர்.

    முடிவில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தனர். #Roadaccident

    போபாலில் குழந்தையை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 22 நாளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி தனது உறவினரின் 4 மாத பெண் கைக்குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்தார்.

    அவர் குழந்தையை தோளில் தூக்கி சென்று வீட்டு அருகே உள்ள வணிக கட்டிடத்துக்குள் செல்வதும், அதன்பிறகு வெளியே வரும் போது அவரிடம் குழந்தை இல்லாததும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றார்.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு உடனடியாக இந்தூர் கோர்ட்டில் தொடரப்பட்டது.

    பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற நவீன் மீதான வழக்கை கோர்ட்டு விரைவாக விசாரித்தது. இதில் போலீசார் குற்றப் பத்திரிகையை ஒரு வாரத்தில தாக்கல் செய்தனர்.

    29 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தூர் கோர்ட்டு நீதிபதி வர்ஷா சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். 4 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற நவீனுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.

    இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், அழுவதை தவிர எதுவும் தெரியாத 4 மாத குழந்தையை மனித தன்மையன்றி கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

    கொடிய குற்றம் செய்த நவீன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவன் என்று கூறினார். இந்த வழக்கில் 22 நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நவீனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ராஜஸ்தானில் வெளி நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் ஜோத்பூர் கோர்ட்டு 18 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    ×