என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "seppankelangu keerai"
- சேப்பங்கிழங்கு இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
- குடல்புண்களையும் ஆற்றுகிறது.
சத்துக்கள் நிறைந்தது இந்த சேப்பங்கிழங்கு இலை ஆகும். பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கைவிட, இந்த கிழங்கின் இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளன. கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், உறுதியையும், ஆரோக்கியத்தையும் இந்த கிழங்கு தரக்கூடியது.
நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை நிவர்த்தி செய்து, குடல்புண்களையும் ஆற்றுகிறது.
முருங்கை கீரையை போலவே, இந்த சேப்பங்கிழங்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது.
சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும், சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன.
இதய வடிவில் காணப்படும், சேப்பங்கிழங்கு இலைகளில், வைட்டபின் B நிறைந்துள்ளது. எனவே, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த இலைகள் சிறந்த மருந்தாகிறது.
வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு உண்டு.
பெண்களை அதிக அளவு பாதிக்கும், மார்பக புற்று நோயையும் நெருங்க விடாமல் செய்ய இந்த சேப்பங்கிழங்கு இலைகள் துணைபுரிகின்றன.
இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த கீரையை பயன்படுத்தலாம். இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து எனலாம். ஏனென்றால், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும். இந்த இலைகளின் சாறு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.
இந்த இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது..
சிலருக்கு இந்த இலைகளால் தோலில் அலர்ஜி ஏற்படலாம்.. சிலருக்கு சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். எனவே, பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். இத்தனை சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு இலைகளை, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பயனடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்