search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "serena williams"

    • அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
    • ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார்.

    மகளிர் டென்னிஸ்ஸில் உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வென்றுள்ள செரீனா கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த மே மாதம் எனக்கு கட்டி இருப்பத கண்டுபிடித்தேன். எம்.ஆர்.ஐ. எடுத்ததில், அது நீர்க்கட்டி என்று தெரியவந்தது என தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "நானும் இன்னமும் உடல்நலம் தேறி வருகிறேன், சிறப்பாக உணர்கிறேன். எப்போதும் உடல்நலம் தான் முன்னுரிமை," என்று செரீனா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    உடலில் நீர்க்கட்டி கண்டறியப்பட்டதும் அதனை அகற்றாமல் செரீனா வில்லியம்ஸ் ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார். எனினும், கட்டி ஓரளவுக்கு வளர்ந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதனை அகற்றியுள்ளார். 

    • அவருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயரிட்டுள்ளனர்.

    வாஷிங்டன்:

    டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு அறிவித்தார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவருடைய கணவர் அலெக்சிஸ் ஓஹானியன் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

    மேலும் செரீனாவும் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைபடத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பெண் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என பெயரிட்டிருந்தனர். இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயரிட்டுள்ளனர்.

    • டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியின்போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க விடைபெற்றார்.
    • மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

    சான்பிரான்சிஸ்கோ:

    23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான 41 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) டென்னிசில் இருந்து ஒதுங்கி அடுத்தகட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தபோவதாக தெரிவித்து இருந்தார்.

    சொந்த மண்ணில் கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன் அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியின்போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க விடைபெற்றார். இதனால் அது தான் அவரது கடைசி போட்டி என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தனது முதலீட்டு கம்பெனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செரீனா பேசுகையில், 'நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஓய்வு என்கிற வார்த்தை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. நான் மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனது வீட்டுக்கு நீங்கள் வந்தால் டென்னிஸ் ஆடுகளம் இருப்பதை பார்க்கலாம்' என்றார்.

    • மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
    • இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர்.

    இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.

    ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.

    இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளார்.

    • முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
    • 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • 4-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
    • ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் முதல் சுற்றில் வெளியேறினார்.

    நியூயார்க்:

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

    உலகின் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் தொடக்க சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெயின் கோசலவை எதிர்கொண்டார். இதில் ரஷிய வீரர் மெட்வதேவ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 10-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), 6-வது வரிசையில் உள்ள அகுஜர் அலிஸ்மி (கனடா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    4-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    கொலம்பியாவை சேர்ந்த டேனியல் காலன் 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். காலன் தகுதி சுற்றில் வென்று முன்னேறியவர் ஆவார்.

    இதேபோல ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் முதல் சுற்றில் வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது வரிசையில் உள்ள அன்ட் கோனடாவிட் (எஸ்டோனியா), 23-வது வரிசையில் உள்ள கிரஜ்கோவா (செக்குடியரசு) லைலா பெர்னாண்டஸ் (கனடா), 5-வது வரிசையில் இருக்கும். ஜபேஷா (துனிசியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    • முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.
    • அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை சந்திக்கிறார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டீபன் கோஸ்லோவை (அமெரிக்கா) சந்திக்கிறார். முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் தனது சவாலை ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) தொடங்குகிறார்.

    இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) சந்திக்கிறார்.

    • ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.
    • நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 40 வயதான இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார். இவர் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க ஓபன் தொடருக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்ற பிறகு தனது வாழ்க்கையில் முக்கியமான பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க ஓபனை வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.

    ஓய்வு முடிவு குறித்து அவர் பேசுகையில், "வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய நேரம் வரும். நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும். நான் டென்னிஸை ரசிக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது.

    நான் ஒரு அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை. நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம். நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான மற்ற விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் செரீனா வென்ச்சர்ஸ் என்ற மூலதன நிறுவனத்தை தொடங்கினேன். அதன் பிறகு நான் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் அந்த குடும்பத்தை வளர்க்க விரும்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.

    • நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
    • முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷியாவைச் சேர்ந்த விடாலியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 3 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விடாலியா டியாட் சென்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் செரீனா 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 4-வது இடத்தில் இருப்பவரான பெர்ட்டென்ஸ் (பிரான்ஸ்) செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 2-வது நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    4-ம் நிலை வீரரான டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டோமி பவுலை 6-4, 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.



    மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

    மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஒரு காலிறுதியில் ஜோகோவிச் (செர்பியா)- நிஷிகோவி (ஜப்பான்) மோதுகிறார்கள். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    மார்புக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. #SerenaWilliams #BreastCancer
    வாஷிங்டன் :

    அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  

    ’ஐ டச் மைசெல்ப்’ பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

     ’ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார்.

    ’பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

    செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SerenaWilliams #BreastCancer
    ×