search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seweage work"

    • ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.
    • பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினரும் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பலஆண்டுகளாக போராடி தற்பொழுதுதான் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக உள்ளதால் கழிவு நீர் செல்ல ஏதுவாக தனியார் இடத்தின் வழியாக குழாய் அமைத்து கழிவுநீரை கொண்டு செல்ல மாநாகராட்சி மூலம் முடிவு செய்து அதற்கான பணிகளும் நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலமாக குழாய் பதிக்க குழி தோண்டிய போது இதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நடுவே நிறுத்தினார்கள். இதனால் பணி நிறுத்தப்பட்டது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் தலைமையில் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இடையூறாக நிறுத்திய வாகனங்களை எடுத்து செல்லமுடியாத அளவிற்கு பொதுமக்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் உடனடியாக வாகனங்களை எடுத்து பணி செய்யவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.இதனை தொடர்ந்து வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக எடுத்தார்கள். பின்பு பணி தொடங்கியது.

    ×