search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sex change surgery"

    • வாலிபர் ஒருவர் மற்றொரு வாலிபரை ஏமாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
    • பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பாரதிய கிஷான் யூனியன் (BKU) இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் இந்த சம்பவம் முஜாஹித் (வயது 20) வயது வாலிபருக்கு நடந்துள்ளது.

    இதெல்லாம் தனக்கு ஓம் பிரகாஷ் என்பரால் நடைபெற்றதாக முஜாஹித் தெரிவித்துள்ளார். முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரியில் ஓம்பிரகாஷ் சேர்த்துள்ளார்.

    அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மருத்துவவர்கள் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் ஓம் பிரகாஷ் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

    முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது ஓம் பிகராஷ் ஆபரேசன் தியேட்டரில்தான் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக முஜாஹித் கூறியதாவது:-

    ஓம் பிரகாஷ் இங்கே என்னை அழைத்து வந்தார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. நான் மயக்கம் தெளிந்து பார்க்கும்போது, நான் பெண்ணாக மாற்றப்பட்டுள்ளேன் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

    பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். இனிமேல் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் யாரும் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார். தனது தந்தையை சுட்டுக் கொள்வேன். குடும்ப நிலத்தின் என்னுடைய பங்கை பெறுவேன் என ஓம் பிரகாஷ் மிரட்டினார்.

    நான் உன்னை பெண்ணாக மாற்றியுள்ளேன். தற்போது நீ என்னும் வாழ வேண்டும். நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்ள வழக்கறிஞரை ஏற்பாடு செய்து விட்டேன். உன்னுடைய நிலத்தை விற்று லக்னோ சென்று விடுவேன் எனக் கூறினார்.

    இவ்வாறு முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    விவசாய தலைவர் ஷியாம் பால் தலைமையில் BKU தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓம் பிரகாஷ் மற்றும் இதில் தொடர்புடைய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே போலீசார் ஓம்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. #Maharashtrawomancop #sexchangesurgery
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே(29). மாநில காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது இம்மாவட்டத்துக்கு உட்பட்ட மஜால்கான் காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் ஆக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 1988-ம் பிறந்த லலிதா, நான்காண்டுகளுக்கு முன்னர் தனது உடலில் ஏற்பட்ட குரோமசோம்களின் கிளர்ச்சியை உணர்ந்த தனது ஆண் நண்பர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

    பெண்ணின் உடல் அமைப்புடனும், ஆணுக்குரிய இதர இயல்புகளையும் சமநிலைப்படுத்த இயலாமல் திண்டாடிய லலிதா, பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுவதுமாக ஆணாகவே மாறிவிட தீர்மானித்திருந்தார். இதற்காக, லலித் என்ற ஆண் பெயரையும் தனக்கு சூட்டி கொண்டார்.

    பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டும், இதற்கான விடுமுறை கேட்டும் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு லலிதா விண்ணப்பித்திருந்தார்.

    ஆனால், போலீஸ் வேலைக்கு ஆண்-பெண்களிடம் உயரம், எடை மற்றும் இதர உடல் அமைப்புகள் வெவ்வேறானவை என குறிப்பிட்ட காவல்துறை அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

    இதைதொடர்ந்து, ஒருமாத மருத்துவ விடுமுறை அளிக்குமாறும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆண் காவலராக பணியை தொடர அனுமதிக்குமாறும் மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டை லலிதா அணுகினார். விடுமுறை அளிக்க முடியாது என டி.ஜி.பி. சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இது அரசு துறை சார்ந்த விவகாரம் என்பதால் மாநில நிர்வாக தீர்ப்பாய நீதிமன்றத்தை நாடுமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியது. இதற்கிடையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய லலிதா தனது கோரிக்கையை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-ஐ சந்தித்து மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை செய்துகொள்ள லலிதாவுக்கு அனுமதி அளித்து உயரதிகாரிகளிடம் இருந்து தற்போது கடிதம் வந்துள்ளதாகவும், இந்த தகவல் லலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீதர் இன்று தெரிவித்துள்ளார். #Maharashtrawomancop #sexchangesurgery
    ×