என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shanghai master
நீங்கள் தேடியது "Shanghai Master"
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #Shanghai #NavakDjokovic
ஷாங்காய்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் ஜோகோவிச், 41-ம் நிலை வீரரான ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சந்தித்தார். 1 மணி 23 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் (குரோஷியா) 6-2, 6-7 (6-8), 5-7 என்ற செட் கணக்கில் நிகோலஸ் ஜார்ரியிடம் (சிலி) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா), போர்னா கோரிச் (குரோஷியா), பீட்டர் ஜோகோவிஸ்க் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

×

X