search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shikhar Dhawan"

    • நாளை நடைபெறும் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிப்பு.
    • வியாழக்கிழமை ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 152 ரன்கள் எடுத்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அதன்பின் விளையாடாமல் உள்ளார்.

    அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பாஞ்சாப் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் பஞ்சாப் அணி நாளை தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, சிஎஸ்கே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது.

    • பஞ்சாப் - மும்பை போட்டிக்கு முன்னதாக் ரோகித் மற்றும் தவான் சந்தித்து கொண்டனர்.
    • இருவரும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. தோள்பட்டை காயத்தில் இருந்து ஷிகர் தவான் இன்னும் மீளாததால் சாம் கர்ரன் பஞ்சாப்பின் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மாவும் தவான் சந்தித்து கொண்டனர். சந்தித்து கொண்ட இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் தவானை பார்த்த சந்தோசத்தில் ரோகித் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பஞ்சாப் அணி தோல்வியடைந்த பிறகு தவான் மற்றும் ரோகித் தோளில் கை போட்டு சிரித்து பேசி மகிழ்ந்த புகைப்படமும் வைரலாகியது.

    இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார்.
    • அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் ஷசாங்சிங். அஷுதோஸ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஷசாங் சிங் 29 பந்தில் 61 ரன்ம், அஷுதோஸ் 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.

    வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    இது ஒரு அற்புதமான ஆட்டம்.மிக மிக நெருக்கமாக இருந்தது.வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க திட்டமிட்டோம். ஆனால் நான் சீக்கிரமே அவுட் ஆனேன் சில விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தோம்.

    அதன்பின் ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார். பெரிய இலக்கை துரத்தும்போது நீங்கள் உத்வேகத்தை தொடர வேண்டும். ஷசாங் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

    அவர் பந்தை மிக நேர்த்தியாக விளையாடினார். அவர் பதற்றம் அடையாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் 7-வது வரிசையில் இருந்து ஆரம்பித்து தற்போது தனது நேர்மறை மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார். இரண்டு இளம் வீரர்களும் அமைதி காத்து, அழுத்தத்தை குறைத்தனர். இவ்வாறு தவான் கூறினார்.

    குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறும்போது, நாங்கள் சில கேட்சுகளை தவற விட்டோம். ரன் சேசிங்கில் கேட்சுகளை தவற விடும் போது வெற்றி கடினமாகி விடும். 15-வது ஓவர் வரை ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் கேட்சுகளை கைவிடும் போது நீங்கள் சிக்கலில் இருப்பீர்கள். நாங்கள் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.

    • ஷிகர் தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • தவான் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டு விளையாடினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் திணறி வருகிறார். அவர் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியிலும் 2021-ம் ஆண்டில் டி20 போட்டியிலும் விளையாடினார்.

    அவர் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் ஐபிஎல்லில் அதிக ரன் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். 217 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டி20 போட்டியில் 2 சதங்கள் அடித்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.

    அவரை பேட்டியெடுக்க வந்த பெண் தொகுப்பாளரிடம் என்னை நீங்கள் மிகவும் கவர்ந்து விட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவரும் பேசியது:-

    தவான்: பார்த்ததும் ஈர்ப்பதை நம்புகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை உண்டு.

    தொகுப்பாளர்: எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.

    தவான்: நீங்களும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டீர்கள்.

    தொகுப்பாளர்: இந்த பேட்டி நிச்சயமாக 100 சதவீதம் அனைவரையும் கவரும் என கூறினார்.

    அந்த பேட்டியில் சச்சின், விராட் கோலி, டோனி போன்றவர்கள் பற்றியும் வெளிப்படையாக பேசினார். மேலும் தனது மகன் குறித்தும் உருக்கமாக பேசினார். 

    • 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • ஒரு ரன்னை எடுக்க சென்ற ரிஸ்வான் பேட்டை தவற விட்டு கை விரல்களால் கீரிஸ் கோட்டை தொட்டார்.

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது.

    முன்னதாக இத்தொடரின் 3-வது போட்டியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறி கையிலிருந்த பேட்டை தவற விட்டு பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். இதனால் எதிர்ப்புறம் இருந்த கிரீஸ் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட 2 ரன்களை எடுத்தார். கை விரல்களால் கீரிஸ் கோட்டை ரிஸ்வான் தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அதை பார்த்த இந்திய வீரர் ஷிகர் தவான் "கபடி கபடி கபடி" என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு ரிஸ்வானை கலாய்த்துள்ளார். இந்த பார்த்த ரசிகர்களும் அவர்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.

    • ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார்.
    • ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன்.

    மும்பை :

    இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள்.இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர். இந்த நிலையில் ஷிகர் தவான், தன்னுடைய இடத்தை அணியில் இருந்து இழந்தார். அவருக்கு பின் கில் நன்றாக விளையாடினாலும் இன்னும் டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் ஷிகர் தவானுக்கு மாற்று வீரனை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இந்த நிலையில் தமது வெற்றிக்கு ரோகித் சர்மா பங்கு இருப்பதாக ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது:-

    ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார். ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன். பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதிலும் சரி பெரிய ஸ்கோர் எடுப்பதிலும் சரி நாங்கள் அடித்தளம் நன்றாக அமைத்தோம்.

    அதற்கு காரணம் ரோகித்தின் ஆதரவு தான். என்னுடைய பல சிறந்த செயல்பாடுகளுக்கு ரோகித்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. இதற்காக ரோகித்துக்கு அந்த பாராட்டுகளை கூற நான் கடமைப்பட்டு இருக்கிறேன். நானும் ரோகித்தும் இணைந்து பல இன்னிங்ஸ் வரை ஆடியிருக்கிறோம்.

    அதில் குறிப்பாக மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் நாங்கள் இருவரும் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது எங்களுடைய சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். இரண்டாவது சிறந்த ஆட்டம் என்றால் 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் நானும் ரோகித் சர்மாவும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது சிறந்த இன்னிங்ஸ்தான்.

    என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.

    தற்போது தவான் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதன் அணிக்கு வெற்றியை பெற்று தர போராடுவார்.

    • முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
    • 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.

    3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

    • உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது.
    • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும்.

    ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவது இல்லை. ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன.

    இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக 50 ஓவர் உலக கோப்பையில் 1992 முதல் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் இம்முறை உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் இந்த வருடம் ஆசிய மற்றும் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றுமாறு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது போன்ற சூழ்நிலையில் எப்போதுமே நீங்கள் உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரும் விருப்பமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் உலக கோப்பையை வெல்வதே முக்கியமாகும். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன்.

    மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவடையும் போது கண்டிப்பாக ஒரு திருப்திகரமான உணர்வு எங்களுக்கு இருக்கும். ஏனெனில் நான் விளையாடிய போது பெரும்பாலும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளோம். அந்த போட்டியில் எப்போதுமே எதிர்பார்ப்புகள் உச்சமாக இருக்கும். அத்துடன் பாகிஸ்தான் அணியுடனும் நாங்கள் சிலவற்றை பேசுவோம்.

    என்று அவர் கூறினார்.

    இருப்பினும் இரு அணிகளுக்கும் சமமாக பேசாத காரணத்தால் அவர் பேசிய அந்த வீடியோவை முதலில் டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் பின்னர் டெலிட் செய்து விட்டது.

    • உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவால் அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை நடத்தப்படும்.
    • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும்.

    2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணன் வழிநடத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், முடிவு இறுதி செய்யப்படவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முதன்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒப்புக்கொண்டது.

    தவான் தவிர, முன்னாள் இந்திய பேட்டர் விவிஎஸ் லக்ஷ்மனும் இந்த போட்டிக்கான தலைமை பயிற்சியாளராக இந்திய அணியில் சேரலாம்.

    ஆசிய விளையாட்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கீழ் வராது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்படாது.

    ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதிகளில் ஆசிய விளையாட்டுகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவால் அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை நடத்தப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும்.

    • எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை.
    • இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது.

    ஐபிஎல் தொடரில் 53-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடியது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலமாக 2-வது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக இந்த வெற்றியின் மூலமாக 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது:-

    இந்த பிட்சில் பேட்டிங் ஆடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. 179 ரன்கள் எடுத்த எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம்.

    எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை. ஆதலால் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடி அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார்கள். அவர்களது விக்கெட்டை கைப்பற்ற நாங்கள் திணறி வருகிறோம்.

    இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது. இதனால் குறைவான ரன்கள் எடுத்து தோற்றுவிட்டோம்.

    இவ்வாறு தவான் கூறினார்.

    • ஷிகர் தவான் 213 இன்னிங்சில் 50 அரை சதம் அடித்துள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 47 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஐ.பி.எல். போட்டியில் அவரது 50-வது அரை சதமாகும். 213 இன்னிங்சில் 50-வது அரை சதத்தை எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார். டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் அவர் இணைந்தார்.

    வார்னர் 57 அரைசதம் அடித்து முதல் இடத்திலும், கோலி, தவான் 50 அரை சதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • கடந்த 13-ந்தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்தார்.
    • தவான் காயத்தில் இருந்து குணமடைய இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகும் என்று பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்தார்.

    மொகாலி:

    பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான், கடந்த 13-ந்தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் அடுத்து இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்த நிலையில் ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமடைய இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகும் என்று பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ட்ரெவர் கோன்சால்வ்ஸ் தெரிவித்தார்.

    இதனால் மும்பைக்கு எதிராக பஞ்சாப் அணி நாளை மோத உள்ள போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×