என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "show cause notice"
- பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
- இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்
கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.
குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.
மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.
இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்