search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk development projects"

    • குட்டையை பார்வையிட்ட கலெக்டர் இந்த குட்டையில் மழைநீர் தேங்குவதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால் பாசனப்பரப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.
    • உடுமலை வட்டாரம் மானுப்பட்டியில் பட்டு வளர்ச்சித் துறை மூலம் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் அரசு நிதி உதவியுடன் தனியார் மூலம் தானியங்கி பட்டு நூல் நூற்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    உடுமலை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

    உடுமலை வட்டாரம் மானுப்பட்டியில் பட்டு வளர்ச்சித் துறை மூலம் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் அரசு நிதி உதவியுடன் தனியார் மூலம் தானியங்கி பட்டு நூல் நூற்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு அரசு மானிய மாக ரூ.96 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டு நூல் நூற்பகத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது நிறுவனத்தின் பட்டு நூல் உற்பத்தி வழிமுறைகள், விற்பனை வாய்ப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இதே கிராமத்தில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் நடவு மானியமாக ரூ.23 ஆயிரத்து 625 பெற்று அமைக்கப்பட்டுள்ள மல்பெரித் தோட்டம், ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பி லான இலவசத் தளவாடங்கள் மற்றும் ரூ. 87 ஆயிரத்து 500 மானிய உதவியுடன் அமைக்கப்பட்ட புழு வளர்ப்பு மனை ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட பெரிசினம்பட்டி குட்டை 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் எந்திரங்களைக் கொண்டு தூர் வாரப்பட்டுள்ளது.

    அந்த குட்டையை பார்வையிட்ட கலெக்டர் இந்த குட்டையில் மழைநீர் தேங்குவதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால் பாசனப்பரப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறையின் நேர்முக உதவியாளர் மகாதேவன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக் குனர் மனீஷா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×