search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sita Rama Thirukalyanam"

    • சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
    • பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா-ராமருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்தனர்.

    முன்னதாக கணபதி பூஜை மற்றும் பல்வேறு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, செயல் அலுவலர் எஸ்.வி நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தெபாசம்பேட் வீதி, ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் உள்ள ஸ்ரீ வேணுகோபால்சாமி தேவஸ்தான பிரகார வளாகத்தில் ஸ்ரீமதி ருக்மணி தேவி மண்டபத்தில், ஸ்ரீ சீதா ராமர் சன்னதியாகவும், உற்சவ மூர்த்தியாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சீதா ராமர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பெண் அழைப்பு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    ×