search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப திருவிழா இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்காக பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்து தெப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கோவிலில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆர்ஜீத சேவைகள் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,646 பேர் தரிசனம் செய்தனர். 30 769 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அறிவிப்பு.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் சாலையையொட்டி வந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. செல்போன்களில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் யானைகள் நடைபாதை வழியாகவோ அல்லது வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவோ வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சத்தங்களை எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
    • அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று இரவு பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 7-வது மைலில் உள்ள முக்குபாவி என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று நடைபாதை அருகே வந்து நின்றது.

    சிறுத்தையை கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நடைபாதையை விட்டு நகராமல் சிறுத்தை நின்றது.

    தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சத்தங்களை எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதையடுத்து பக்தர்கள் குழுக்களாக செல்ல அனுமதித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் யாரும் மலை பாதையில் தனியாக நடந்து செல்லக்கூடாது என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அப்பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    வன விலங்குகளை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை துன்புறுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் 3 தங்க கிரீடம் திருடியதாக கருதப்படும் வாலிபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். #GovindarajaSwamyTemple
    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கல்யாண வெங்கடேஸ்வர சாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு அலங்கரிக்க கூடிய 3 தங்க கிரீடங்கள் கடந்த 2-ந்தேதி மாயமானது.

    இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள 12 சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் கோவிலில் இருந்து வேகமாக ஓடிவந்து வெளியேறுகிறார். அந்த வாலிபர் தான் தங்க கிரீடங்களை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த புகைப்படத்தை அடையாளம் கண்ட போலீசார் நேற்று அதனை வெளியிட்டனர்.



    புகைப்படத்தில் காணப்படும் வாலிபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.  #Tirupati #GovindarajaSwamyTemple
    ×