என் மலர்
நீங்கள் தேடியது "அரை இறுதி போட்டி"
- வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது.
- ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி வாய்ப்பை பெற்ற இந்தியா லீக் சுற்றில் சிலி ( 7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகிய அணிகளை தோற்கடித்தது.
ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா (4-0), கனடா (7-0), அயர்லாந்து (5-1) ஆகிய வற்றையும், கால் இறுதியில் பிரான்சையும் தோற்கடித்தது. இந்தியாவை போலவே ஜெர்மனியும் கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் (3-1) வீழ்த்தியது. போட்டி முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.
13-வது முறையாக அரை இறுதியில் விளையாடும் ஜெர்மனி அணி இந்தியாவை தோற்கடித்து 10-வது தடவையாக இறுதி போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
முன்னதாக நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
5 முதல் 8-வது இடங்களுக்கான போட்டிகளில் பெல்ஜியம்- பிரான்ஸ் (மதியம் 2.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.
பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.
35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.
தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal #WorldBoxing






