search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.

    இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
    • ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு கோய்க்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 24).

    இவர் பாகோடு பட்ட விளையை சேர்ந்த நீதுலால் (22) என்பவரை செப்டம்பர் 2019-ல் திருமணம் செய்தார். இதை அடுத்து அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.

    இதுகுறித்து ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    • மணமகனுக்கு நோய் இருப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு
    • போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்க விளையைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    பெற்றோரை இழந்த இளம்பெண் கான்வெ ண்டில் படித்து வளர்ந்தவர். இவர்களது திருமணம் நேற்று நடை பெறுவதாக இருந்தது.தேமானூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மாலை 3 மணிக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    உறவினர்கள் உள்பட பலரும் விழாவுக்கு வந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரித்தபோது, மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என மணமகள் வீட்டார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு மணமகன் வீட்டாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசில் மணமகன் புகார் செய்தார்.எனக்கு நோய் இருக்கிறது என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்ப டுத்தி, மனதளவில் வேதனைப்படுத்தி யுள்ளார்கள் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

    மேலும் மணப்பெண்ணை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஏற்கனவே இவருக்கு நோய் இருப்பது தெரிந்திருந்தால் திருமணத்திற்கே சம்மதித்து இருக்க மாட்டேன்.

    ஏற்கனவே தாய், தந்தையை இழந்து, உறவினர் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறேன். எனவே இவரை திருமணம் செய்ய முடியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பரளை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 26). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாகவும், திருமணத்தின் போது பெற்றோர்கள் கொடுத்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தர மறுக்கிறார் என்றும், அவரிடம் இருந்து தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.

    பின்னர் லட்சுமி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீதும் தன் குழந்தை மதிவர்ஷிதா மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். போலீசார் பேரிகாட் அமைத்து நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை தன் மீதும் குழந்தை மீதும் தனக்குத்தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் அனுஸ்ரீ (வயது 26). இவருக்கும் நைனா காடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அனுஸ்ரீ பெற்றோர் வீட்டில் குடியிருந்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார்.
    • முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். நிஷாத்தின் மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன்மூலம் இருவருக்கும் பலரது தொடர்பு கிடைத்தது.

    இதில் பணம் படைத்த முதியவர்கள் யார்-யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு கொண்டார். இதில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.

    ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனை ரஷிதாவின் கணவர் நிஷாத் செல்போனில் படம் எடுத்தார்.

    அதன்பின்பு கணவன்-மனைவி இருவரும் முதியவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ரஷிதாவுடன் உல்லாசமாக இருக்கும் படம் இருப்பதாகவும், அதனை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் மிரட்டினர்.

    இதனை கேட்டு மிரண்டு போன முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரஷிதா மற்றும் அவரது கணவர் நிஷாத் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினார்.

    இப்படி ரூ.27 லட்சம் வரை இருவரும் பணம் பறித்தனர். அதன்பின்பும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் முதியவர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளானார்.

    இதற்கிடையே முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர். அவர்கள் இதுபற்றி முதியவரிடம் கேட்டபோது அவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறி அழுதார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாத்-ரஷிதா இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இதுபோல வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன் விரோதம் காரணமாக தாக்குதல்
    • ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.

    காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்
    • புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகள் சிவப்பிரியா (வயது 24). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தாய் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். அதில் விருத்தா சலத்தை அடுத்த எருமனூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்குமாறும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் இளம்பெண் திடீர் மாயமானார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 43). இவர் ராமநாதபுரம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (வயது21).

    தினந்தோறும் வேலைக்குச் சென்று விடுவதால் மகள் அபிநயா வீட்டில் தனியாக இருப்பதை யசோதா விரும்பவில்லை. இதனால் பாரதிநகரில் இருக்கும் தனது தாய் வீட்டில் மகளை விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    நேற்று காலையிலும் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் மகளை விட்டுவிட்டு யசோதா வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை என்று யாசோதாவுக்கு அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    • விசாகப்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார்.
    • ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார். போதை தலைக்கேறியதால் திடீரென அந்த பெண் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட போலீசார் இளம்பெண்ணிடம் சென்று நீங்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.

    அப்போது பீர்பாட்டில் உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்த் என்பவர் கண்ணில்பட்டு காயமடைந்தார். போலீசார் கோவிந்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் இளம்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெரு பகுதியில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்ததால், பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் ஆர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஆர்த்தி (வயது 20). பட்டதாரியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்ததால், பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் ஆர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து

    அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்ன தானப்பட்டி போலீசார் மாயமான ஆர்த்தியை தேடி வருகின்றனர்.

    ×