search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்தார்த்"

    கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் மறைவுக்கு நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #NaMuthuSwamy
    கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானார். தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.

    நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். 

    நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 



    இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
    ஜோதிகாவிற்கு கணவராக காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கும் வித்தார்த், இந்த படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். #KaatrinMozhi #Vidaarth
    36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் 'துமாரி சுலு' என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான "காற்றின் மொழி "படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது. மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி காற்றின் மொழி-யில் மீண்டும் இணைந்து களமிறங்கியுள்ளனர். அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார்.

    மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா "காற்றின் மொழி"யில் அதற்கு நேர் மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான பல விஷயங்களோடு இப்படத்தை இயக்கியுள்ளார் ராதா மோகன். பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி என்றார் ராதா மோகன். 

    விதார்த் கூறுகையில், ‘ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன். கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான, அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை எனக்கு மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக கொடுக்கும்’ என்றார்.



    லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் குமாரவேல், பாஸ்கர், மனோபாலா, மோகன் ராமன், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் நித்திலன் இயக்கத்தில் வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற இருக்கிறது. #KuranguBommai
    புளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.

    இந்த அறிவிப்பினை புளு சாப்யர் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



    முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    புதுமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கத்தில் வித்தார்த் - அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி வரும் ஆயிரம் பொற்காசுகள் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Vidharth
    கபாலி, தசாவதாரம் என 500-க்கும் மேற்பட்ட படங்களில் செட்டிங் மாஸ்டர், சாபு சிரில், பிரபாகரன், முத்துராஜ், கதிர், ராஜீவன் உள்ளிட்ட கலை இயக்குநர்களிடம் உதவியாளர் என சினிமாவில் சுமார் 39 வருடங்களாக பணிபுரிந்து வரும் ஜி.ராமலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `ஆயிரம் பொற்காசுகள்'. 

    வித்தார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக சைத்தான் பட நாயகி அருந்ததி நாயர் நடித்திருக்கிறார். ரவி முருகையா இயக்கியிருக்கும் இந்த படத்தில் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜோஹன் இசையில், பானுமுருகன் ஒளிப்பதிவில் செய்திருக்கும் இந்த படத்திற்கு ராம் - சதீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

    புதையலை கருவாக கொண்டு கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Vidharth
    இயக்குநர் பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிவு இயக்கும் படத்தில் வித்தார்த் - ரேஷ்மா அன்னராஜன் இணைந்து நடித்து வருகின்றனர். #Vidharth
    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு', `குரங்கு பொம்மை' போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்' படத்தில் நடித்திருந்தார். 

    இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி' படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    அதேநேரத்தில், பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிவு இயக்கத்தில் ஒரு படத்திலும் வித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் வித்தார்த் ஜோடியாக ரேஷ்மா அன்னராஜன் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான `அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    வித்தார்த்தின் `குரங்கு பொம்மை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த உதயகுமார் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஜோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ராம் - சதீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். #Vidharth

    ×